சற்று முன்



ஆராய்ச்சி திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் அறிமுக நாயகர்கள் நடிக்கும் ஆராய்ச்சி கதாநாயகன் முத்து பாரதி பிரியன்,அனீஷ் , நடிகை மனிஷாஜித் , மற்றும் செந்தில்குமாரி ,சிசர் மனோகர்

வெடிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.. இக்கதையினை இயக்கியுள்ளார் ரவி செல்வன்.

இப்படத்தை தயாரித்துள்ளார் முத்து பாரதி பிரியன்.

படத்தில் தொடக்கத்திலேயே ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி என்னவென்றால் எய்ட்ஸ் நோயை தடுப்பது எப்படி என்று ஆராய்ச்சி செய்து கொள்ளும் சயின்டிஸ்ட்.

அவரது மாணவனாக நாயகன் இருக்கிறார்.

நாயகன் மற்றும் நாயகி இருவரும் மருத்துவர்கள்.

இருவருமே HIV எதிராக போராடும் மருத்துவர்கள் விழிப்புணர்வு மற்றும் எய்ட்ஸ் இல் பாதிக்கப்பட்ட அனைவரையும் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுவோர். 

இவர்களது கல்லூரியில் இருந்து ஒரு கிராமப்புறத்திற்கு செல்கிறார்கள் ஒரு விழிப்புணர்வு கேம்ப் போடுகிறார்கள் கிராமப்புற மக்கள் இடையே நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த மாணவர்கள் செல்கிறார்கள். அப்பொழுது அங்கு வரும் சிறு பிள்ளைகள் குழந்தைகள் தாய்மார்கள் அவர்களுக்கெல்லாம் எச்ஐவி எய்ட்ஸ் தொற்று இருக்கிறது.

அதை அறிந்து நாயகி அதிர்ச்சி அடைகிறாள்.

ஒரு நாள் ஒரு சிறு பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை அப்பொழுது ரத்தம் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அந்தப் பிள்ளை ரத்தம் எடுக்கப் போகிறாள் நாயகி மனிஷாஜித் அப்பொழுது அந்த பிள்ளை நீ போட்டு எடுத்துக் கொண்டால் தான் நான் எடுப்பேன் என்று கூறுகிறாள்.

  நாயகி மனிஷாஜித்  சரி நான் முதலெடுத்துக் கொள்கிறேன் என்று தனது ரத்தத்தை எடுக்கிறாள் அதேபோல் சிறுபிள்ளை இடமும் எடுக்கிறாள் எடுத்த பிறகு டெஸ்ட்க்கு கொடுக்கிறாள்.

பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்  வருகிறது குழந்தைக்கு ஒன்றும் இல்லை என்று.

மற்றொரு பிளட் ஸ்டில் எய்ட்ஸ் தொற்று இருக்கிறது என்று வருகிறது கதாநாயகி அதிர்ச்சி அடைகிறாள் தனக்கு எப்படி எச்ஐவி தொற்று வந்தது என்று இதிலிருந்து கதாநாயகி மீண்டாளா இல்லையா எப்படி வந்தது தொற்று என்பத இப்படத்தின் கதை.  

அனீஷ் மிக நன்றாக நடித்துள்ளார்.கதைக்கு மிகக் கச்சிதமாக புரிந்துள்ளார்.

மனிஷாஜித்  நன்றாக நடித்துள்ளார் மிக அழகாக உள்ளார். 

திரைப்படம் சமூகத்திற்கு விழிப்புணர்வு அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம்.

எச்ஐவி பற்றி தெரிந்தும் தெரியாதவர்களுக்கு திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டு.

எய்ட்சை பற்றி  அனைத்தையும் இப்படத்தின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார் தான்.

திரைப்படம் இக்காலகட்டத்தில் சமூகத்திற்கு ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை