அரிமாபட்டி சக்திவேல் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகரான பவன் நடிப்பில் அரிமாபட்டி சக்திவேல். நாயகியாக மேக்னா மற்றும் சார்லி, சூப்பர் குட் சுப்பிரமணி , அழகு , பிர்லா போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அழகான ஒரு கிராமம் அந்த கிராமத்திற்கு என்று ஒரு கட்டுப்பாடு உண்டு என்னவென்றால் சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும்’ என்கிற கொள்கை மற்றும் கோட்பாடு கொண்ட கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்கிற இளைஞன், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து மணமுடிக்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.
நடிகர் சார்லி மிக யதார்த்தமான நடிப்பு. ஒரு தந்தையாக வாழ்ந்து உள்ளார்.
நாயகன் பவன் நன்றாக நடித்துள்ளார்.
நாயகி மேக்னா மிக அழகாக உள்ளார் நன்றாக நடித்துள்ளார்.
80, 90களில் வில்லனாக ஜொலித்த அழகு படத்தில் குணச்சித்திர வேடத்தில் ஒரு தாத்தாவாக நடித்துள்ளார்.
அவரது நடிப்பு நன்றாக உள்ளது.
கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
அண்ணனாக வரும் பிர்லா போஸ் வில்லத்தனமாக நடித்துள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
பாடல்கள் சுமார் தான்.
காலங்கள் மாறினாலும் சாதி மாறாது என்று கூறும் கருத்து இத்திரைப்படம்.
மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை