சற்று முன்



காடுவெட்டி நடுநாட்டின் நாட்டாமை திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர் கே சுரேஷ்.  இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் காடுவெட்டி. இந்த படத்தை இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கியிருக்கிறார். மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. 

        நடுநாட்டின் நாட்டாமை 


இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் நகரத்தில் வாழும் மக்கள் காதலை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், கிராமத்தில் இருக்கும் மக்கள் காதலை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை தான் இயக்குனர் காட்ட முயற்சித்து இருக்கிறார். நகரத்து காதல் என்றால் பெற்றோர்கள் காதலிப்பவர்கள் ஆகியோருடன் இந்த பிரச்சனை முடிந்து விடும். அதே கிராமத்து காதல் என்றால் மக்கள், சாதி, எந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் ஹீரோ தன்னுடைய சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கும் சாதி சங்க தலைவராக இருக்கிறார். இவர் காதல் திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்தும் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவது, குடும்ப பிரச்சனை என்றெல்லாம் இருக்கிறார். இறுதியில் கிராமத்து-நகரத்து காதலால் ஏற்படும் விளைவுகளை எப்படி ஆர் கே சுரேஷ் கையாண்டார் என்பதே படத்தின் மீதி கதை.

ஆர் கே சுரேஷ் நடிப்பு நன்றாக உள்ளது.

ஆக்சன் காட்சிகள் சண்டை காட்சிகள் அனைத்தும் அற்புதமாக சிறப்பாக செய்துள்ளார்.

தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பாகவும் பெண்களுக்கு அண்ணனாக தந்தையாக நடுநாட்டின் நாட்டாமையாக வாழ்ந்துள்ளார். கதாபாத்திரம் மிகச்சிறப்பு. 

தனது சமுதாயத்தினரை தொட்டால் என்னவாகும் என்று வெளிப்படையாக காண்பித்துள்ளார் இயக்குனர்.


இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இப்படத்தில் இச்சமூகத்தில் நடந்தவை நடந்து கொண்டிருப்பதை அனைத்தையும் வெளிப்படையாக காண்பித்துள்ளனர்.

காடுவெட்டி அவர்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றி.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை