சற்று முன்



சத்தமின்றி முத்தம் தா’ திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த்  அவரது நடிப்பில் சத்தமின்றி முத்தம் தா’  

மற்றும் புதுமுக நாயகி பிரியங்கா திம்மேஷ் நடிக்க, ராஜ் தேவ் இயக்கத்தில் தயாரான ‘சத்தமின்றி முத்தம் தா’  திரைப்படம்   திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

ஒரு விபத்தில் தனது நினைவுகளை  சந்தியா கதாபாத்திரத்தில் வரும்  பிரியங்கா இழக்க, அவளை அன்பாக கவனித்துக் கொள்ளும் கணவராக ஸ்ரீகாந்த் காட்சியளிக்கிறார். இது ஒருபுறம் இருக்க, நான் தான் அவளது கணவன் என இன்னொரு இளைஞன் போலீஸில் புகார் தருகிறான்.

இதில் விசாரணை தொடங்க விக்னேஷ் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என தெரியவருகிறது. இது பார்பவர்களை மட்டும் குழப்பாமல், சந்தியாவையும் சேர்த்து போட்டு குழப்புகிறது. உண்மையான கணவன் யார்? சந்தியா வாழ்கையில் என்ன நடந்தது? என்பதே இப்படத்தின் கதை ?

பணத்துக்காக கொலை செய்வதுதான் முழு நேரத் தொழில் என்றாலும், நல்லவர்கள் மீது கனிவு காட்டும் விதத்தில் அமைந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த். தான் யார், தனக்கு என்ன நடந்தது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என எதுவும் தெரியாமல், உண்மையிலேயே தன் கணவன் யார் என புரியாமல் தவிப்பவராக பிரியங்கா திம்மேஷ் என அற்புதமான கதையம்சமாக இருந்தாலும், அதை வெளிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது.

ஸ்ரீகாந்த் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி என்ற பாடல் இளைஞர்களை கவரும் இளசுகளை அள்ளும். கிளாமராக உள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லருக்கேற்ற நல்லதொரு கதை இயக்குனர் இயக்கியுள்ளார்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை