சற்று முன்



போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! என்ற உறுதி மொழி எடுக்க வேண்டும்-போதை ஒழிப்பு பிரிவு ஏடி.எஸ்.பி. எஸ்.லட்சுமணன் !

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! என்ற உறுதி மொழி எடுக்க வேண்டும்-போதை ஒழிப்பு பிரிவு ஏடி.எஸ்.பி.    எஸ்.லட்சுமணன்

மூவேந்தர் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக பூமி அறக்கட்டளை பெயர் பலகை திறப்பு விழா! மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்சியானது.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது

இந் நிகழ்ச்சியில் இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்து மறைந்த பூமிநாதன் குடும்பத்திற்கு 50,000 நிதி உதவி மற்றும் 30,000 ஓட்டுனர்களுக்கு தலா 10 லட்சத்திற்கான காப்பீட்டு வசதி திட்டம்,ஓட்டுநர் விபத்து ஏற்பட்டு வீட்டில் உள்ள ஓட்டுனர்களின்  குடும்பத்திற்கு தேவையான ஆறு மாதத்திற்கான உணவு பொருட்களும் வழங்கப்பட்டது .

மேலும் சமூக ஆர்வலரும் கல்வியாளரும் ஆன பால் ஜெபஸ்டின் "பூமிநாதன் அறக்கட்டளை"மூலம் ரூ25,000 நன்கொடை வழங்கினார்

நல சங்கத்தின் தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக   போதை ஒழிப்பு பிரிவு ஏடி.எஸ்.பி.    எஸ்.லட்சுமணன் மற்றும் பால் ஜெபஸ்டின் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

அப்போது பேசிய போதை ஒழிப்பு பிரிவு ஏடி.எஸ்.பி எஸ்.லட்சுமணன் கூறியதாவது:

இந்த மூவேந்தர் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதற்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்

ஓட்டுனர்கள் மிகவும் பொறுமைசாலிகள் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள் தன்னுடன் பயணிப்பவர்கள் தேவையை அறிந்து நடந்து கொள்வார்கள்

இந்த சங்கத்துக்கு எனது முழு ஒத்துழைப்பு உண்டு

இந்த சங்கத்திற்கு நான் ஒன்று கேட்டுக்கொள்வது  சங்கத்தில் உள்ள உறுப்பினர்களாகிய ஓட்டுனர்கள் அனைவரும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்!

போதையை முற்றிலும் ஒழிப்போம்! என்று அனைவரும்

உறுதிமொழி எடுக்க வேண்டும் 

தமிழக அரசும் அதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது நாமும் அதற்கு ஒத்துழைப்பு தந்து இந்த உறுதி மொழியை முன்னெடுத்து நாம் பயணிக்க வேண்டும்

என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


கருத்துகள் இல்லை