SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா !
SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா !!
தெலுங்கு நட்சத்திர குடும்பத்திலிருந்து தமிழுக்கு வரும் நாயகி நிஹாரிகா !!
“மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் ஷேன் நிகாம் ஜோடியாக இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா !!
SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தில் தெலுங்கு நட்சத்திர குடும்பத்து நடிகை நிஹாரிகா இணைந்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து, தமிழுக்கு வந்திருக்கிறார் நாயகி நிஹாரிகா. தெலுங்கில் நாயகியாக அறிமுகமான நிஹாரிகா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். வெப் சீரிஸ்கள் என பல படைப்புகளை தயாரித்து வருகிறார்.
தற்போது தமிழில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம் ஜோடியாக “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். ஷேன் நிகாம் ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார்.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
கருத்துகள் இல்லை