சற்று முன்



லவ்வர் (lover ) திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் நடிப்பில் லவ்வர் !

தமிழில் ஜெய் பீம், குட் நைட் போன்ற வெற்றி படத்தை தொடர்ந்து தற்போது மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர் அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மணிகண்டன் கௌரிப்பிரியா, கண்ணா ரவி நிகிலா ஷங்கர் ஹரிஷ் குமார் ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லர் டாலர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஒரு காதல் ஜோடிக்குள் நடக்கும் சிக்கல்கள் குறித்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

படத்தில் அருண் (மணிகண்டன்) மற்றும் ஸ்ரீகவுரி ப்ரியா (ஸ்ரீகவுரி ப்ரியா) ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் யுத்தம் தான் லவ்வர் படத்தின் கதை. படத்தில் மணிகண்டனும் கௌரி பிரியாவும் கல்லூரியில் இருந்து காதலித்து வருகிறார்கள். அவர்களது காதல் ஆறு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக கசங்க தொடங்குகிறது எந்த வேலைக்கும் செல்லாமல் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று இருக்கும் அருண் தன்னுடைய லவ்வர் வேலைக்கு செல்ல வலியுறுத்தும் போதெல்லாம் நான் சந்தோஷம் செய்யப் போகிறேன் என்று மூதாதை தனமாக சுற்றி வருகிறார்.

காலையில் 10:00 மணிக்கு குடிக்கும் அளவிற்கு மதுவிற்கும் அடிமையாக இருக்கிறார் மணிகண்டன். வேலையில்லாத காரணத்தினாலும் சொந்த தொழில் தொடங்க முடியாத விரத்திய நாளும் மணிகண்டனுக்கு செல்லும் இடமெல்லாம் ஏற்படும் வசனத்தினாலும் அவரை ஒரு கோபக்காரராக மாறுகிறது அந்த கோபத்தை தன்னுடைய காதலி மீது காட்டுகிறார். இதனால் அவரது காதலி எரிச்சலடைகிறார்.

மணிகண்டன் ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலி யாருடனும் பழக கூடாது வெளியில் செல்லக்கூடாது என்று தன்னுடைய காதலை மீது ஒரு சந்தேக பார்வை மணிகண்டனுக்கு ஆரம்பிக்கிறது. ஆனால், மணிகண்டனின் உத்தரவுகளை மீறியும் நாயகி கௌரி பிரியா தனக்கு பிடித்ததை போல வாழ்ந்து வருகிறார். இதனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை எழுகிறது. இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? மணிகண்டன் சொந்த தொழில் தொடங்கினாரா? என்பது படத்தின் மீதி கதை.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார் தான்.

இந்தத் திரைப்படம் காதலர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை