சற்று முன்



ஹானர் (HONOR) உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற X சீரிஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது !

ஹானர் (HONOR) உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற X சீரிஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது, புதுமையான அம்சங்களும் நீடித்த ஆயுளும் கொண்ட ஹானர் X9b ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்.


ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களிலேயே முதல் முறையாக குஷனிங் தொழில்நுட்பத்துடன் அல்ட்ரா-பவுன்ஸ் 360° ஆன்டி-டிராப் டிஸ்ப்ளே

மிகப்பெரிய 5800mAh பேட்டரியுடன் நேர்த்தியான மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.


நம்பகமான மற்றும் நீடித்த ஸ்மார்ட்போன்கள் கொண்ட புதிய சகாப்த்தத்தை அறிமுகப்படுத்துகிறது, ஸ்மார்ட்ஃபோன் சிறப்பு பற்றி புது விளக்கம் கொடுக்கிறது

சென்னை பிப்ரவரி 16, 2024 - சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் HONOR, இன்று உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற X சீரிஸ் வரிசையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன்,  ஹானர் X9b ஸ்மார்ட்ஃபோனை வெளியிடுகிறது. இந்த வெளியீட்டின் மூலம், அனைத்து பிரிவுகளையும் சார்ந்த நுகர்வோருக்கும் எக்ஸ்ட்ரா வழங்குவதே ஹானரின் நோக்கமாகும், ஈடுஇணையற்ற டிஸ்ப்ளே குவாலிட்டி, அதிககாலம் உழைக்கக்கூடிய பேட்டரி மற்றும் உகந்த மென்பொருள் செயல்திறன் ஆகியவற்றுடன், பல்வேறு வகையிலான பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.     

ஹானர் X9b 5G ஸ்மார்ட்போன் மட்டுமல்லாது, இந்தியாவில் இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவும் நோக்கத்துடன், சிறந்த ஆடியோவை வழங்கும் ஹானர் சாய்ஸ் X5 மற்றும் ஃபிட்னஸ் டிராக்கிங்கிற்கான ஹானர் ஹெல்த் செயலி பொருத்தப்பட்ட ஹானர் சாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆகியவற்றையும் பிராண்ட் அறிமுகப்படுத்துகிறது.

ஹானர் X9b – எக்ஸ்ட்ரா ஆயுளுடன் சிறப்பம்சங்களுக்கு புது விளக்கம் கொடுக்கிறது

ஹானர் X9b ஆனது ஹானர் அல்ட்ரா-பவுன்ஸ் 360° ஆன்டி-டிராப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது நீடித்து உழைக்கும் மற்றும் நிலைத்திருக்கும். அதன் ஏர்பேக் குஷனிங் தொழில்நுட்பம் மற்றும் ஃபோனை சுற்றியுள்ள புதுமையான ஷாக்-அப்சார்பிங் சிஸ்டம் 1.5 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் உடையாமல் பாதுகாக்கிறது. மார்பிள் போன்ற கடினமான தரைகளில் கூட, ஃபோனின் ஆறு பக்கங்கள் மற்றும் நான்கு மூலைகளுக்கும் 360° பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நேர்த்தியான மெல்லிய வடிவமைப்பில் எக்ஸ்ட்ரா ஆயுள் கொண்ட 5800mAh பேட்டரி மூலம், பயனர்கள் சார்ஜ் தீர்ந்துபோகுமோ என்பது பற்றி கவலைப்படாமல் நாள் முழுவதும் பயன்படுத்தலாம். அதிக நேரம் பயன்படுத்தும் வகையிலும் கண்ணுக்கு அசௌகரியம் இல்லாத வகையிலும், ஹானர் X9b ஸ்மார்ட்ஃபோனில் ஹார்டுவேர் லெவல் லோ ப்ளூ லைட்டுடன் டைனமிக் லைட் பயன்படுத்தப்படுகிறது, இதனால் பயனர்களுக்கு கண்களில் சோர்வு ஏற்படாது. மனதை ஈர்க்கக்கூடிய 1.5K ரெசல்யூஷனை (429 PPI) சப்போர்ட் செய்யும் 120Hz பேனலுடன் 6.78-இன்ச் டிஸ்ப்ளே, 1.07 பில்லியன் வண்ணங்கள் மற்றும் 100% DCI-P3 ஆகிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்ஃபோன் காட்சிகளை மென்மையாகவும் தெளிவாகவும் நுணுக்கமான விவரங்களுடனும் வழங்குகிறது.

ஹானர் X9b 5G ஸ்மார்ட்ஃபோன் ரூ.25,999 என்ற MOP விலைக்கு விற்கப்படும். பிப்ரவரி 16 மதியம் 12 மணி முதல் Amazon.in, பிராண்டின் வலைத்தளமான - www.explorehonor.com மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள மெயின்லைன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். மேலும் முதல் விற்பனை நாளில் இந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்கும்போது அனைத்து வங்கி அட்டைகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி பயனர்கள் ரூ.3000 உடனடி வங்கி தள்ளுபடி அல்லது ரூ.5000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையைப் பெறுவார்கள். இதன் மூலம் விலை ரூ.22,999 ஆக குறைகிறது. வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்கள் வரை வட்டியில்லா இ.எம்.ஐ வசதியும் வழங்கப்படுகிறது.

இது மட்டுமல்ல, ஹானர் நிறுவனம் அறிமுக சலுகையாக ரூ.699 மதிப்புள்ள சார்ஜரை இலவசமாக வழங்குகிறது 

மேலும் ஹானர் நிறுவனம் ரூ.2,999 மதிப்புள்ள ஆன்சைட்கோ வழங்கும் இலவச ஹானர் ப்ரொடெக்ட் பிளானையும் அறிவித்துள்ளது, இதில் ஆறு மாதங்களில் ஒரு முறை ஸ்கிரீன் ரீப்ளேஸ்மெண்ட், ஆறு மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், 90% வரை 30 நாட்கள் உறுதியான பைபேக் போன்ற சுவாரஸ்யமான சலுகைகள் அடங்கும்  

ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 – அல்டிமேட் ஆடியோ கம்பானியன்

'X' சீரிஸ் முழுமையடையும் வகையில், ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 ஆனது சீரான மற்றும் பிரீமியம் குவாலிட்டி ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது, சாதனங்களுக்கு இடையில் தடையின்றி மாறுவதற்கு ஹானர் AI ஸ்பேஸ் மூலம் மேம்பட்ட இணைப்பைக் கொண்டுள்ளது. எர்கோனோமிக்ஸ் இன்-இயர் டிசைன், புதுமையான 30 DB ANC (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்) அல்காரிதம்ஸ், தூசி மற்றும் நீர் புகாததற்கான IP54 ரேட்டிங் மற்றும் 35 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது, பயணத்தின்போது சிறந்த ஆடியோ பெர்ஃபார்மென்ஸை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த இயர்பட்ஸ் சிறந்த நண்பனாகும்.


ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 பிப்ரவரி 16 முதல் மதியம் 12 மணிக்கு தொடங்கி Amazon.in, பிராண்டின் வலைத்தளமான - www.explorehonor.com மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள மெயின்லைன் கடைகளில் ரூ.1999 என்ற மலிவு விலைக்கு விற்பனை செய்யப்படும்.

ஹானர் சாய்ஸ் வாட்ச் – லேட்டஸ்ட் ஹானர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

X சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாது, உங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹானர் ஹெல்த் செயலி கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்துவதில் ஹானர் பெருமிதம் கொள்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச், நீச்சல் மற்றும் சர்ஃபிங் போன்ற சுவாரஸ்யமான நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற 5ATM நீர் புகாத அம்சத்துடன் 21 டைனமிக் 'ஆல்வேஸ்-ஆன்' வாட்ச் ஃபேஸ்களைக் காண்பிக்கும் AMOLED மிக-மெல்லிய டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பில்ட்-இன் ஜி.பி.எஸ் மற்றும் ஒன் கிளிக் எஸ்ஓஎஸ் காலிங், 12 நாள் வரைக்கும் தாங்கக்கூடிய பேட்டரி ஆயுளுடன், இந்த ஸ்மார்ட்வாட்சையும் உங்கள் ஸ்மார்ட்போனையும் சிக்கலின்றி இணைக்கலாம், இதனால் தடையின்றி என்றும் தொடர்பில் இருக்க முடியும்.

 ஹானர் சாய்ஸ் வாட்ச் ஆனது ரூ.6499 என்ற விலைக்கு விற்கப்படும் அறிமுகச் சலுகையாக ரூ.500 தள்ளுபடியுடன், பிப்ரவரி 24 முதல் மதியம் 12 மணிக்கு தொடங்கி Amazon.in, பிராண்டின் வலைத்தளமான - www.explorehonor.com மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள மெயின்லைன் கடைகளில் ரூ.5999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும்.


கருத்துகள் இல்லை