சற்று முன்



ஒவ்வொரு தருணத்தையும் காதல் உணர்வுடன் இருக்கச் செய்யும் ‘ஐரிஸ் ரொமான்ஸ் #ஹார்டேட்பீ’ புதிய பர்பியூம் ஐரிஸ் ஹோம் அறிமுகம் !

ஒவ்வொரு தருணத்தையும் காதல் உணர்வுடன் இருக்கச் செய்யும் 

‘ஐரிஸ் ரொமான்ஸ் #ஹார்டேட்பீ’ புதிய பர்பியூம் ஐரிஸ் ஹோம் அறிமுகம் 


காதலர் தினத்தையொட்டி பல்வேறு நறுமணங்கள் அடங்கிய 

ரொமான்ஸ் கிப்ட் பாக்சையும் அறிமுகம் செய்துள்ளது 

சென்னை, பிப். 9-

காதலர் தினத்தையொட்டி, சைக்கிள் பியூர் அகர்பத்தி குழுமத்தின் ஒரு பிராண்டான ஐரிஸ் ஹோம் பேக்ரன்ஸ் நிறுவனம், ‘ஐரிஸ் ரொமான்ஸ் #ஹார்டேட்பீ’என்னும் புதிய பர்பியூமை அறிமுகம் செய்துள்ளது. காதல் மற்றும் வசீகரிக்கும் உணர்வை தூண்டும் விதமாக புதிய நறுமணத்துடன் இந்த பர்பியூம் வெளிவந்துள்ளது. 

மேலும் காதலர் தினத்தையொட்டி ரொமான்ஸ் கிப்ட் பாக்ஸ் முதல் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட மலர் பூங்கொத்துகள் வரை பல்வேறு பொருட்களையும் ஐரிஸ் அறிமுகம் செய்து ஒவ்வொரு காதலர் தின கொண்டாட்டத்தின்போதும் காதலர்கள் இடையே நெருக்கமான அன்பை உறுதி செய்கிறது.

தங்கள் காதலர்களை வெகுவாக கவரும் விதமாக இந்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி, ஐரிஸ் ஹோம் பேக்ரன்ஸ் அதன் மயக்கும் ரொமான்ஸ் கேண்டில் ஜார், ரொமான்ஸ் வோட்டிவ் மெழுகுவர்த்திகள், ரொமான்ஸ் வேப்பரைசர் கிப்ட் செட், ரொமான்ஸ் கிப்ட் செட், ஸ்பெஷல் ரொமான்ஸ் கிப்ட் போன்ட், மற்றும் ஸ்பெஷல் ரொமான்ஸ் கிப்ட் போனு போன்றவற்றைக் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பொருட்களும், ஒவ்வொருவருக்கு இடையேயும் மகிழ்ச்சி மற்றும் அன்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை திரவியங்களின் கலவையுடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆடம்பரமான பரிசுகள், உணர்வுகளை உயர்த்தும் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதில் பிராண்டின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் காதலுக்கான அடையாளமாகவும் திகழ்கின்றன.

புதிய அறிமுகம் குறித்து பேசிய ரிப்பிள் பிராக்ரன்சஸ் நிறுவனத்தின் முதன்மை வாசனை கிரியேட்டரும், நிர்வாக இயக்குனருமான கிரண் ரங்கா கூறுகையில், காதலர் தினம் என்பது அன்பையும் பாசத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு நேரமாகும், மேலும் எங்களின் ஐரிஸ் ஹோம் பிராக்ரன்சஸ் நிறுவனம், அழகை வெளிப்படுத்துவது மட்டுமின்றி குறிப்பிடத்தக்க அர்த்தத்தையும் நடைமுறைத் தன்மையையும் கொண்ட பல்வேறு தயாரிப்புகளை உருவாக்க நாங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளோம். உங்கள் காதலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பரிசு அளிக்க விரும்பினாலும் அல்லது உங்களுக்கான உபசரிப்பை விரும்பினாலும், உங்களுக்கான விருப்பங்களை நாங்கள் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஐரிஸ் ரொமான்ஸ் தயாரிப்புகள் உங்கள் வீட்டில் ஒரு அமைதியான மற்றும் நெருக்கமான சூழலை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது, மேலும் இது இனிமையான மாலைப் பொழுதில் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ஒரு நிறுவனமாக, எங்கள் ஆர்வம் நறுமணம் மற்றும் வடிவமைப்பை மட்டுமே சுற்றி வருகிறது. காதலர் தினத்திற்காக நாங்கள் தொகுத்துள்ள பரிசுகள் ஒரு பரிசாக மட்டுமல்ல, அன்பையும் பாசத்தையும் குறிக்கும் நீடித்த மற்றும் நறுமணமிக்க நினைவுகளை உருவாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எங்களின் புதிய ரொமான்ஸ் கலெக்‌ஷனைப் பயன்படுத்தி நறுமணமிக்க நினைவுகளை உருவாக்கும்போது, உங்கள் காதலரிடம் உங்கள் அன்பையும் பாசத்தையும் அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எளிமையாக புகுத்தும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நேர்த்தியான தொகுப்புகள் எந்த இடத்திற்கும் ஏற்ற வகையில் உள்ளன. இந்த காதல் பருவம் உங்களுக்கு அன்பையும் பாசத்தையும் பரிசாக அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

புதிய காதலர் தின பரிசுகள் ரூ.......... இருந்து தொடங்குகிறது. இவை இந்தியா முழுவதும் உள்ள ஐரிஸ் அரோமா பூட்டிக்கிலும், இணையதளத்திலும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை