சீயான் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா !
சீயான் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா !
தமிழ் சினிமாவின் தனித்துவமான நட்சத்திர நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சீயான் 62’ எனும் படத்தின் நட்சத்திர பட்டியலில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் படம் தயாராகி வருகிறது- இந்தப் படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு, பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் அண்மைக்காலமாக எந்த வேடம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்தி, ‘நடிப்பு அரக்கன்’ எனும் நற்பெயரை சம்பாதித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா, இந்த படத்தின் நட்சத்திர பட்டியலில் இணைந்திருக்கிறார். அத்துடன் எஸ். ஜே. சூர்யா அவருடைய திரைப்பயணத்தில் இது வரை பார்த்திராத.. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதனை படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது.
சீயான் விக்ரமும், எஸ் ஜே சூர்யாவும் முதன்முறையாகக் கூட்டணி அமைத்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.மேலும் இப்படத்தின் புதிய அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருங்கள்.
கருத்துகள் இல்லை