சற்று முன்



முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

 


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருப்போரூர், -



திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996-97 ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், கலந்து கொண்ட முன்னாள்  மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு பழைய நினைவுகள், கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


மேலும் தங்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் வரவழைத்து அவர்களிடம் ஆசி பெற்றனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்து வாழ்த்து தெரிக்கப்பட்டது. முன்னதாக  மறைந்த ஆசியர்களுக்கு நினைவஞ்சலி செல்லுத்தினர்.

மாணவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நன்கொடையாக பத்து பேன்களையும் 20 டியூப் லைட்டுகளையும் நன்கொடையாக கொடுத்தனர்.

மாணவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் 60 ஆயிரம் செலவில் வர்ணம் தீட்டியும் கொடுத்தனர்.


கருத்துகள் இல்லை