சற்று முன்



சைரன் திரை விமர்சனம் !

 


தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான ஜெயம் ரவி நடிப்பில் சைரன்.

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவரை தொடர்ந்து படத்தில் அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி, வீரம் யுவானா,அழகம் பெருமாள்,அஜய் என்று பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி எஸ் பின்னணி இசை கொடுக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

தான் செய்யாத தவறுக்கு 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நாயகன் 14 நாட்கள் பரோலில்  வெளியில் வந்து தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதை இந்த படத்தின் ஒன் லைன். படத்தின் நாயகன் ஜெயம் ரவி (திலகன்) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ஜெயம் ரவி தான் செய்யாத தவறுக்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார்.

பின்னர் பரோலில் 14 நாட்கள் பரோலில் வெளியில் வரும் ஜெயம் ரவியால் அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், பள்ளி செல்லும் வயதில் இருக்கும் அவரது மகள் மட்டும் அவரது வருகையை எண்ணி கோபப்படுகிறார். அதற்கு காரணம் தன்னுடைய தந்தை சிறைக்கு சென்றதால் பள்ளியில் அவர் கேலிகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டது தான். சிறையில் இருந்து பரோலில் வெயில் வந்த ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்தைக் காணத்தான் வெளியில் வந்திருக்கிறார் என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் தன்னை இந்த நிலைக்கு ஆளாகிய அவர்களை பழிவாங்கவே ஜெயம் ரவி வெளியில் வருகிறார். அவரை கண்காணிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவியுடனே பயணிக்கிறார் யோகி பாபு. ஆனா,ல் ஜெயம் ரவி பழிவாங்கத்தான் வெளியில் வந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பும் போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷ். அவரை தொடர்ந்து கண்காணித்து, அவர் ஏதாவது தவறு செய்தால் கையும் களமாக பிடிக்க காத்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் ஜெயம் ரவியின் இந்த நிலைக்கு யார் காரணம்? கீர்த்தி சுரேஷ்ஷை மீறி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர்களை ஜெயம் ரவி பழி வாங்கினாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக் கதை.

ஜெயம் ரவி ஒவ்வொரு முறையும் தனது நடிப்பை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தந்தைக்கும் மகளுக்கும் ஆன பாசப் போர் என்று கூறலாம்.

யோகி பாபுவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய கூடுதல் பலம்.


கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது தளபதி விஜய் இன் மனரீசத்தை கையாண்டு உள்ளார்.

சில காட்சிகளில் தளபதி விஜய் போன்றே நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அனுப்பமா  மிக அழகாக உள்ளார் .

சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் அனைவரையும் கவரும். 

சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம்.

இசை மற்றும் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை