சற்று முன்



டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் 500 விவசாயிகளுக்கு நிலையான விவசாயத்தை மேம்படுத்தும் விதத்தில் சூரிய ஒளி பூச்சி பிடிப்பான் கருவி வழங்கப்பட்டது !

டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம்  500 விவசாயிகளுக்கு நிலையான விவசாயத்தை மேம்படுத்தும் விதத்தில் சூரிய ஒளி பூச்சி பிடிப்பான் கருவி வழங்கப்பட்டது !

திருச்சி  30 ஜனவரி 2024:   டால்மியா பாரத் பவுண்டேசன் நிறுவனம் விவசாயத்தில் நீடித்த நிலையான   வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

டால்மியா சிமென்ட் (பாரத்) லிமிடெட் (DCBL)  ஓர் முன்னணி இந்திய சிமென்ட் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டங்களை (சிஎஸ்ஆர்)  டால்மியா பாரத் பவுண்டேசன் (DBF)  .மூலம் செயல்படுத்திவருகிறது

தமிழ்நாட்டின், திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தைச் சுற்றியுள்ள ஏழு கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 500 தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் சூரிய ஒளி பூச்சிப் பிடிக்கும் கருவி    வழங்கப்பட்டது . இந்த பூச்சி பிடிக்கும் கருவிகள் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி சாதனமாகும்.  இந்த கருவி பயிர்களை தாக்கும் பூச்சிகளை கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தி பயிர் சேதத்தை குறைத்து அதிக மகசூல் பெற வழிவகை செய்கிறது. 

இந்த கருவி முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குகிறது மேலும் சார்ஜ் செய்வதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும்  விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்த கருவி தானாகவே அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்கை எரிய செய்யும்.  மேலும்  

பூச்சிகள் மற்றும் ஈக்களை ஈர்த்து  இறுதியில் தண்ணீர் நிரப்பப்பட்ட தட்டில் விழும் வடிவில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டு செயல்படுகிறது. வேளாண்மை அறிவியல் மையம் (KVK), மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இக்கருவியினை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக இக்கருவியினை  பயன்படுத்தும் முறை மற்றும் இதன் பயன்கள் பற்றிய பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  

மேலும் 100 விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பைகள் இயற்க்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதத்தில் வழங்கப்பட்டது, 100 பயனாளிகளுக்கு அசோலா கால்நடை ஊட்டச்சத்து பாசி வளர்க்கும் பைகள் வழங்கப்பட்டது.

இந்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குனரும், ஆலையின்  தலைவருமான திரு.கே.விநாயகமூர்த்தி கூறுகையில், “நங்கள் விவசாயிகளுக்கான நீடித்த நிலையான விவசாய முறைகள் குறித்தும்,  நிலையான பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி விவசாயிகளின்  பயன்பெறும் வகையில் பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும் சூரிய ஒளி சக்தியினை பயன்படுத்துவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க சக்தி சுற்றுசூழல் பாதிப்பை குறைக்கிறது. மேலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கி விவசாயிகளின் வாழ்வில் நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்க முயல்கிறோம்.

டால்மியா நிறுவனம், பெண்களின் முன்னேற்றம் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மற்றுமொரு முயற்சியாக டால்மியா பாரத் பவுண்டேசன்  கிராமப்பகுதிகளில் உள்ள  20 விளிம்புநிலை பெண்களுக்கு 20 நாள் ஆரி எம்பிராய்டரி பயிற்சியை நடத்தியது.  ஆரி எம்பிராய்டரி பயிற்சி பெற்று தங்களின் திறனை வளர்த்து சுய வேலைவாய்ப்பினை பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்ததும், பயனாளிகள்  தங்கள் அருகாமையில் கிடைக்கும்  ஆர்டர்களைப் பெற்று , இதன் மூலம் மாதம்  ரூ. 3000 முதல் 10000 வரை வருமானம் ஈட்ட வழிவகை செய்துள்ளது. 2022-23 ம் நிதியாண்டில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 140 பெண் பயனாளிகளுக்கு இதேபோன்ற பயிற்சியை வழங்கியது குறிப்பிடத்தக்கது

டால்மியா பாரத் பவுண்டேசன் நிறுவனம் கிராம பரிவர்தன் திட்டத்தின் மூலம் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குடும்பங்களில் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்ய பல்வேறு உதவிகளை  தொடர்ந்து வழங்கி வருகிறது.


கருத்துகள் இல்லை