சற்று முன்



Blue Star (ப்ளூ ஸ்டார் ) திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்  தயாரித்துள்ள படம் ப்ளூ ஸ்டார்   இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளன.

எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷாந்தனு, நடிகை கீர்த்தி பாண்டியன் , திவ்யா துரைசாமி  , பாக்ஸ், பிருத்திவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ப்ளூஸ்டார்.

 கிரிக்கெட்டை உலகமாகக் கருதும் அசோக் செல்வன், ஷாந்தனு, இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி, அரக்கோணம் பகுதியில் 90களில் நடைபெற்ற கதை, கிரிக்கெட்டில் நடைபெறும் சாதிய அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

கிரிக்கெட்டும் அரசியலும் ரொம்பவே நம்பும்படியான வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒடுக்குமுறையின் பல அடுக்குகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது” மிக அற்புதமான திரை கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இருவரும் மோதும் காட்சிகள் மிக எதார்த்தமாக இயல்பாக உள்ளது.

இவர்கள் இருவரும் கிரிக்கெட்டை உயிராக நேசித்து விளையாடும் காட்சிகள் அனைத்தும் அற்புதம்.

பாக்ஸ் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.

இவரை ரோல் மாடலாக வைத்து அசோக் செல்வன் வாழ்ந்து வருகிறார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பாக்ஸ் இருக்கிறார்.

இவர்கள் லீக் போட்டியில் விளையாடும் காட்சிகள் அனைத்தும் நன்றாக சுவாரசியமாக இயக்குனர் எடுத்துள்ளார். 

கீர்த்தி பாண்டியன் நடிப்பு நன்றாக உள்ளது.

அதில் புல்லட் டீம் இன் கேப்டன் கூருகையில் திரையரங்கில் பார்க்கும் அனைவரும் சிரிப்பில் மட்டும் இல்லை கைத்தட்டல்கள் குவியும். 

இங்கு இருக்கும் விளையாட்டு அரசியல் வேறு எங்கும் இல்லை அதனால் நான் வெஸ்ட் இண்டீஸ் க்கு  செல்கிறேன் என்று அவர் கூறுவார்.

அதை நம்மால் உணர முடியும்.

திவ்யா துரைசாமி அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது. காதல் காட்சிகள் எதார்த்தமான நடிப்பு. சிறிது நேரம் வந்தாலும் அவரது காட்சிகள் அனைவரையும் கவரும் மிக அழகாக உள்ளார். 

தரமான ஸ்போர்ட்ஸ் டிராமா,  எல்லாரோட பர்பாமன்ஸ் நன்றாக உள்ளது.

விளையாட்டுத் துறையின் அரசியலை மிக துல்லியமாக படமாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

இத்திரைப்படத்தை இயக்கியதற்கும் தயாரித்த நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள்.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating: 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை