ஜெய் விஜயம் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக வளர்ந்து இருப்பவர் நடிகர் ஜெய் ஆகாஷ் அவரது நடிப்பில் ஜெய் விஜயம் .
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஜெயசதீஷன் நாகேஸ்வரன். மற்ற நடிகர் நடிகைகள் அக்ஷயா, கண்டமுதன், ஏ.சி.பி.ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாஹர், டாக்டர் சரவணன், பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது வெற்றி பெற்றதா இல்லையா பார்ப்போம்.
ஜெய் ஆகாஷ்க்கு ஒரு கார் விபத்து நடக்கிறது. இந்த விபத்தால் 2012 க்குப் பிறகு 10 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை மறந்துவிடுகிறார். மெமரி லாஸ். மறந்துபோன ஆண்டில் ஜெய் ஆகாஷ் இரட்டை கொலை செய்திருக்கிறார் என்று போலீசார் அவரை பிடிக்கிறார்கள். ஆனால் ஜெய் ஆகாஷ் அதை மறுக்கிறார். மறந்துபோன ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர போலீசார் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். அவர் சுயநினைவுக்கு வந்தாரா? கொலை செய்தாரா? என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் ஆரம்பம் முதல் ஒரு வீடு வீட்டில் ஒரு புகை மூட்டம் திரைப்படத்தில் ஒரு புறம் புகை மூட்டம் ஒரு கதாபாத்திரமாகவே வந்திருக்கிறது.
இது பார்க்கும் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
ஜெய் ஆகாஷ் நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு.
சண்டை காட்சிகளும் சிறப்பாக உள்ளது.
அக்ஷயா நன்றாக நடித்துள்ளார்.
இவரது காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.
பாடல்கள் சுமார் தான்
இசை மற்றும் பின்னணி இசை ஓகே.
மொத்தத்தில் சுமாரான படமாக அமைந்துள்ளது.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை