"ராபின்ஹூட்" படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !
நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் "ராபின்ஹூட்" படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !!
முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைகின்றனர். இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அட்டகாசமான கூட்டணியில் இப்பட அறிவிக்கப்பட்ட கணத்திலேயே, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு குடியரசு தின நன்னாளில் இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ராபின்ஹுட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் தனது சகோதர சகோதரிகளாகக் நினைத்து, அவர்களிடமிருந்து பணத்தைத் திருட அனைத்து உரிமைகளும் தனக்கு இருப்பதாக நினைக்கும் நிதின் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும், இந்த ராபின்ஹுட் டைட்டில் அந்த கதப்பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளது.
எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படை பணம்தான்
யாராவது பணம் என்ன செய்யும் எனக் கேட்டால் ?
குடும்பத்திற்கு இடையே சண்டை மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் என்பேன்
அதைத் தான் பணம் செய்கிறது
ஒட்டுமொத்த தேசமும் எனது குடும்பம்
பணக்கார ஆண்கள் அனைவரும் எனது சகோதரர்கள், பணக்கார பெண்கள் அனைவரும்
என் சகோதரிகள்
எனக்கு தேவை இருந்ததால் அவர்களின் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் எடுத்துக்கொள்வேன்
ஆனால் அவர்கள் என் மீது கொள்ளையடித்தாக புகார் செய்கிறார்கள்
அதற்காக நான் வருத்தப்படவில்லை, ஏனென்றால் என் குடும்பத்திடமிருந்து பணம் எடுக்க எனக்கு உரிமையிருக்கிறது . இந்தியா எனது நாடு இது எனது அடிப்படை உரிமை. இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்.
இந்த அழுத்தமான வசனத்தை பேசியபடி நிதின் கதாப்பத்திரம் வீடியோவில் அறிமுகமாகிறது.
இந்த வீடியோவில் நிதினின் கெட்-அப் மற்றும் அவரது தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கிறது. நிதின் தனது பையில் நிறைய பணம் மற்றும் தங்கத்துடன் சாண்டா கிளாஸாக நுழைகிறார். பைக்கின் முன்பகுதியில், ‘நான் இந்தியன்’ என்று எழுதப்பட்டுள்ளது, பின்பகுதியில், நான் அரிதானவன் என எனக்குத் தெரியும் என்று எழுதப்பட்டிருக்கிறது. கடைசியாக, பணத்தை மறைவானதொரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
நடிகர் நிதின், நவநாகரீக உடையில் ஸ்டைலான லுக்கில், மிகக் கூலாக வருகிறார். தனது முதல் இரண்டு படங்களில் வித்தியாசமான முயற்சியில் அசத்தலான படங்கள் தந்த இயக்குநர் வெங்கி குடுமுலா, இந்த முறையும் ஒரு புதிய முயற்சியுடன் வந்திருப்பது அறிமுக வீடியோவில் தெரிகிறது. டைட்டில் வீடியோவிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார் இயக்குநர். நிச்சயமாக இந்த டைட்டில் வீடியோ, மிக வித்தியாசமான ஐடியாவாக முத்திரை பதிக்கிறது. காட்சியின் வடிவமைப்பு, பின்னணி, உடை வடிவமைப்பு, தொழில்நுட்ப நேர்த்தி அத்தனையிலும் பிரம்மாண்டமும், கச்சிதமும் மின்னுகிறது.
நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார், சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, பிரவின் புடி படத்தொகுப்பாளராகவும், ராம் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள் .
நடா கிரீட்டி ராஜேந்திர பிரசாத் மற்றும் வெண்ணிலா கிஷோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகர்கள்: நிதின், ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்குநர்: வெங்கி குடுமுலா
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர்
CEO : செர்ரி
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு : சாய் ஸ்ரீராம்
கலை இயக்குநர்: ராம் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: ஹரி தும்மலா
லைன்புரடியூசர் : கிரண் பல்லாபள்ளி
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு - யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
https://youtu.be/RNuVnHlRjP0
கருத்துகள் இல்லை