சற்று முன்



வருவேன் உனக்காக" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுக விழா !


வருவேன் உனக்காக" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுக விழா !

புதுமுக பெண் இயக்குனர் நிவேதா சந்தோஷ் இயக்கத்தில் அனு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக வருவேன் உனக்காக திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுக விழா நடைபெற்றது.

இவ் விழாவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நிகழ்வில் சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன்,  திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனசேகர் மற்றும் குழுவினர்கள் இணைந்து வெளியிட்டனர்...

இவ்விழாவினில்

பேசிய 

படத்தின்

 *இயக்குனர் நிவேதா சந்தோஷ்* 

என்னோட பட குழுவினர் அனைவரும் இந்த படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க இந்த படத்தை நாங்க கஷ்டப்பட்டு தான் தொடங்கினோம்.

எல்லாரும் கிண்டல் பண்ணாங்க அதையும் தாண்டி இப்போ இந்த படத்தை ட்ரெய்லர் வர கொண்டு வந்திருக்கோம்.

இதுவே எனக்கு வெற்றி தான் திரையரங்கில் மிக விரைவில் இந்த படம் வரும்.

இந்த படத்தில் இருக்கிற பட குழுவினர் எல்லாருக்கும் நன்றி இது ஒரு கமர்சியல் படம் தான் வல்கரா எந்த ஒரு சீனும் எடுத்ததில்லை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் நீங்க இந்த படத்துக்கு எனக்கு சப்போர்ட் பண்ணுங்க நன்றி...

 *படத்தின் தயாரிப்பாளர்  G.தனசேகர் பேசியது* 

எனக்காக சேலம் ஆர் ஆர் அவர்கள் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்திருக்காங்க இந்த படத்துல நான் ஹீரோவா பண்ணி இருக்கேன் படத்துல நான் மட்டும் ஹீரோ கிடையாது இந்த படத்தில் நடித்த எல்லாருமே ஹீரோ தான்.

என் பொண்ணு விஸ்காம் முடிச்சுட்டு இந்த படத்தை இயக்கி இருக்காங்க ஒரு சின்ன பட்ஜெட்டில் ஒரு நல்ல தரமான படம் பண்ணி இருக்கோம்.

விஷால் சொன்னாரு பெரிய படம்  எடுக்குறதா  இருந்தா  வாங்க இல்லன்னா வராதீங்கன்னு சொன்னாரு.

ஆனா அவரு எடுத்த "செல்லமே" படம் கூட சின்ன பட்ஜெட் படம் தான்  அந்த படம் வெற்றி படம் ஆச்சு இந்த படமும் வெற்றி பெறும் நன்றி....

 *சேலம் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் பேசியது* 

இந்த படத்துல நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்காங்க சினிமா துறையில் சிறு படங்களுக்கு இருக்கின்ற சிரமங்கள் எல்லாருக்கும் தெரியும் அரசு ஒரு பெரிய வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

சிறு படங்களுக்கு சிறு படமாக இருந்தாலும் இது மாபெரும் வெற்றி அடைய வேண்டும் 

எந்தத் துறையில் இருந்தாலும் அந்த துறையில் ஜெயித்தால் நாம் தான் அந்தத் துறைக்கு ஹீரோ.

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் முதல்வராக உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்று கேட்டார்கள்  நான் எனது துறையில் நான் தான் முதல்வர் என்று கூறினேன்.

தன்னைப் போல பிறரை நேசி தனக்கு கிடைத்த வாழ்க்கையை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் தமிழனா இருக்க வேண்டும் அந்த உணர்வோடு இருக்க வேண்டும் தனக்கு கிடைத்த வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்க உழைச்சு வாழுங்க உடல் பலம் தான் சொத்து கேட்கும் திறன் பார்க்கும் கண்கள் துடிக்கும் இதயங்கள் இருக்கும்போது யாரையும் கெடுத்து வாழ வேண்டாம் உழைத்து வாழ வேண்டும்.

கேப்டன் மறைவிற்கு வடிவேலு செல்லாத காரணம் தனக்கு ஏதும் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் தான் அவர் வரவில்லை.

வருவேன் உனக்காக சிறு படமாக இருந்தாலும் இது மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று எனது மனதார ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி....

 *ஆர் கே அன்பு செல்வன் பேசியது* 

வருவேன் உனக்காக படம் 2024 இல் விரைவில் வெளிவர உள்ளது இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்க உழைப்பே போட்டு இருக்காங்க படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகும் மக்கள் எல்லாரும் வந்து தியேட்டர்ல வந்து படம் பாக்கணும்.

விஜயகாந்த் மறைவிற்கு.சிஎம் வந்துட்டு போறாரு இந்த வடிவேலால வர முடியாதா ஏன் அவர்கிட்ட என்ன பணமா இல்ல வந்து போறதுக்கு ஒரு நாலு எஸ் கார்டு கூட்டிட்டு வரலாம் போலீஸ்காரங்க பந்தோபஸ்தோட வரலாம் அதை மீறி அவர்கள் என்ன செய்ய போறாங்க ஆயிரம் இருந்தாலும் ஒரு சாவுக்கு கூட வராமல் இருக்கிறார் வடிவேலு வருவேன் உனக்காக படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நன்றி...

படத்தின் கதாநாயகனாக தனசேகர் , கதாநாயகியாக ஜெயந்தி நடித்துள்ளார்.

இசைப் பணியை விக்னேஷ்  இசையமைத்துள்ளார்

படத்தின்  முக்கிய வேடத்தில் சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்...

மேலும் இந்த நிகழ்வின் போது படத்தின் தயாரிப்பாளர்கள் தனசேகர், சாரதா பிச்சாண்டி மற்றும் படத்தின் இயக்குனர் நிவேதா சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை