ரூட் நம்பர். 17 திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான ஜித்தன் ரமேஷ் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த படம் ரூட் நம்பர். 17. இந்த கதையினை இயக்குனர் அபிலாஷ் தேவன் இயக்கியுள்ளார்.
காதல் ஜோடிகளான அஞ்சனா மற்றும் கார்த்திக் இருவரும் தனிமையில் சந்தோசமாக இருப்பதற்காக சத்யமங்களம் காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். இவர்கள் செல்லும் போது யாரும் இவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தங்களது போனை வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அஞ்சனா கிளம்பும்முன் தனது தோழிக்கு மட்டும் சொல்லிவிட்டு செல்கிறார். இவர்கள் காட்டுக்குள் சென்றதும் சந்தோசமாக இருக்கின்றனர்.
பார்ப்பதற்கு சைக்கோ போல் இருக்கும் மர்மமான நபர் ஒருவர், இவர்கள் இருவரையும் கடத்தி கொண்டுபோய் அவனது இடத்தில் வைக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது, அந்த சைக்கோ இவனை பிடித்துவிடுகிறான். பிறகு இரண்டு நாட்கள் ஆகிறது. அப்போது அஞ்சனாவின் தோழி இரண்டுநாட்கள் ஆனதால் போலீசிடம் புகார் கொடுக்கிறார், பிறகு போலீஸ் அவர்களை தேடி செல்கிறது. கடைசியில் அஞ்சனா, கார்த்திக் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பதும் அந்த சைக்கோ என்பதே படத்தின் மீதி கதை…
ஜித்தன் ரமேஷ் நன்றாக நடித்துள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை