சற்று முன்



கற்றாழையின் மென்மையுடன் கூடிய ITC விவெல் சோப்பின் சமீபத்திய விளம்பரத்தில் இயற்கையான அழகுடன் மின்னும் நடிகை சோனம் கபூர் !

 

கற்றாழையின் மென்மையுடன் கூடிய ITC விவெல் சோப்பின் சமீபத்திய விளம்பரத்தில் இயற்கையான அழகுடன் மின்னும் நடிகை சோனம் கபூர் 

விவெல் அலோவேரா சோப்பின் விளம்பரத் தூதராக சோனம் கபூரை ITC விவெல் பிராண்டு நியமித்துள்ளது

Chennai, December 19, 2023: இளமையின் உற்சாகமும், புதுமையின் ஆற்றலும் நிறைந்த நடிகை சோனம் கபூர் ITC விவெல் பிராண்டின் சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்துள்ளதோடு, அந்த பிராண்டின் புதிய விளம்பரத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ITC விவெல் பிராண்டு அதன் நுகர்வோருக்கு மென்மையும், ஊட்டமும் நிறைந்த சருமத்தினை வழங்கும் விவெல் சோப்பின் பல்வேறு ரகங்களை பல ஆண்டுகளாக வழங்கிவருகிறது. கற்றாழையின் (அலோவேரா) செழுமை மற்றும் இயற்கையின் அழகிய சூழலில் அமைக்கப்பட்ட இந்த விளம்பரக் காட்சியில் தோன்றும் சோனம் கபூர் - இயற்கையான எழிலின் அடையாளமாக, இன்றைய இளம் இந்திய நுகர்வோரின் உணர்வுகளை தன் வசம் ஈர்க்கிறார்.

பிராண்ட் டேவிட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரம் புத்துணர்ச்சிவூட்டும் ஒரு ரம்மியமான பின்னணியுடன் அமைக்கப்பட்டுள்ளது; மேலும், விவெல் சோப்பின் முக்கிய மூலப்பொருளான ஊட்டச்சத்து நிறைந்த கற்றாழையின் மீது அனைவரின் கவனத்தையும் பதியச் செய்கிறது. மகிழ்ச்சியுடன் வரும் சோனம் கபூருடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் படம் விவெல் அலோவேரா சோப்பின் மென்மையான மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளை எடுத்துக்கூறுகிறது. விவெல் அலோவேரா சோப் அனைத்து வயதினருக்கும் உகந்த ஒரு சரியான தேர்வாக உள்ளது.

விளம்பரப் படத்தை இங்கே காணுங்கள்  


ITC லிமிடெட் நிறுவனத்தின் பர்சனல் கேர் புராடக்ட்ஸ் பிசினஸ் பிரிவின் தலைமை நிர்வாகி திரு. சமீர் சத்பதி அவர்கள் இதுகுறித்து, "சோனம் கபூர் அவர்களை விவெல் பிராண்டின் அம்பாசிடராக இணைத்துள்ளதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சோனம் அவரது உண்மையில் ஒரு இனிமையான ஆளுமை நிறைந்தவர்; எனவே எங்கள் பிராண்டிற்கு ஒரு புதிய புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் அவர் கொண்டு வந்துள்ளார்; மேலும், சருமத்திற்கு ஊட்டமளித்து மேம்படுத்தும் தயாரிப்பின் அம்சங்களுக்கு ஒரு முழுமையான உதாரணமாக உள்ளார்.” என்று தெரிவித்தார்/

ITC விவெல் உடனான தனது கூட்டணி பற்றி கருத்து தெரிவித்த நடிகை சோனம் கபூர், “விவெல் பிராண்டின் தத்துவம் என்னுடன் ஒத்துப்போவதால் விவெல் தயாரிப்புகளின் பிரதிநிதியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்வதன் மூலம், இயற்கையான அந்த சருமமே உங்களுக்கு சௌகரியமாகவும் இருக்குமென நான் நம்புகிறேன்; இயற்கையின் நன்மையும், அதன் வரப்பிரசாதமும் நம் சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும் வழியை நமக்கு காட்டுகிறது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு,” என்று கூறினார்.

கற்றாழை மற்றும் வைட்டமின் E ஆகியவை நிறைந்த விவெல் அலோவேரா சோப்பின் நற்குணங்கள் சருமத்திற்கு ஒரு இனிமையான விருந்தாக அமைகிறது. ரீடெயில் ஸ்டோர்கள், மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் 100 கிராம் விவெல் அலோவேரா சோப் ரூ.30-க்கும், ஐந்து 100 கிராம் சோப்புகள் கொண்ட பேக் ரூ.100-க்கும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை