ஹிருத்திக் ரோஷனின் அடுத்த சரவெடி! வெளியானது பைட்டர் படத்தில் இருந்து புரமோஷனல் பாடல் !
ஹிருத்திக் ரோஷனின் அடுத்த சரவெடி! வெளியானது பைட்டர் படத்தில் இருந்து புரமோஷனல் பாடல் !
'பேங் பேங்' (2014) மற்றும் 'வார்' (2019) ஆகிய படங்களின் வெற்றிக்கு பிரபு ஹிருத்திக் - சித்தார்த் ஆனந்த் வெற்றிகரமான கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் படம் தான் ஃபைட்டர். இந்த படத்தில் ரித்திக் ரோஷன் ஷம்ஷேர் பதானியா என்ற போர் விமான பைலட் ஆக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் உள்ளனர். ஃபைட்டர் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது ஃபைட்டரின் புரமோஷன் பாடலான 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) பாடலில் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் அசாதரான நடன அசைவுகளை மீண்டும் வழங்கி உள்ளார். கடந்த வாரம் வெளியான ஃபைட்டர் படத்தின் முதல் பாடலான 'ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) பாடலில் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். ஃபைட்டரின் சமீபத்திய புரமோசனல் பாடலான 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) மூலம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன திறமையை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளர். இந்த பாடல் ஹிருத்திக் ரோஷனின் மற்றொரு மறக்கமுடியாத ஹூக்ஸ்டெப்பையும், ரசிகர்களுக்கு மற்றொரு ஹிட் பாடலையும் வழங்கி உள்ளது.
ஹிருத்திக் ரோஷனின் நடன அசைவுகள் மட்டுமின்றி, பாடலின் ஹைலைட் அவரின் கவர்ச்சிகரமான உடல் அசைவுகள் ஆகும். இதன் மூலம் இந்தியவின் ஃபிட்னஸ் ஐகானாக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும் இந்தியாவின் கிரேக்க கடவுள் பட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளார்.
ஹிருத்திக் ரோஷனின் ஏக் பால் கா ஜீனா, மெயின் ஐசா கியூன் ஹூன், தூம் அகெய்ன், பேங் பேங், குங்ரூ மற்றும் ஷேர் குல் கயே போன்ற புகழ்பெற்ற நடனப் பாடல்களில் 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) ஹூக்ஸ்டெப் இணைந்துள்ளது. 'இஷ்க் ஜெய்சா குச்' பாடலில் ஹிருத்திக் ரோஷன் தீபிகா படுகோனேவுடன் நடனமாடி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒன்கவுட் ஆகி உள்ளது.
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25, 2024 அன்று திரையரங்குகளில் 'ஃபைட்டர்' வெளியாக உள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://bit.ly/IshqJaisaKuch
கருத்துகள் இல்லை