வா வரலாம் வா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான பிக் பாஸ் புகழ் பாலாஜி நடிப்பில் வா வரலாம் வா. மற்றும் சரண சுப்பையா , பயில்வான் ரங்கநாதன், தீபா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இந்த கதையினை L.G ரவிச்சந்தர் எழுத, சுரேஷ் பாபு மற்றும் L.G ரவிச்சந்தர் இவர்கள் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
கதையின் நாயகனாக பாலாஜி
கதையின் ஆரம்பத்தில் ஒரு செய்தி சேனலுக்காக ஒரு போலீஸ் இண்டெர்வியூ கொடுக்கிறார் அதில் ஒரு மோசமான கொலைகாரன், கொள்ளைக்காரன் தோட்டா ராஜேந்திரன் என்பனை பற்றி சொல்கிறார். தோட்டா ராஜேந்திரன், பணத்திற்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்தவன், இவன் ஒருஒரு கொள்ளைக்கும் வித்யாசமான கெட்டப் போட்டு திருடுவான். இவனையும், இவனின் கூட்டாளியையும் பிடிக்க போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.
ஜெயிலில் இருந்து வரும் கதையின் நாயகன் பாலாஜி பல இடங்களில் வேலை தேடி கிடைக்கவில்லை. அதனால் தோட்டா ராஜேந்திரனிடம் பாலாஜி, மற்றும் அவனின் நண்பன் இருவரும் வேலைக்கு சேருகின்றனர். அப்போது இவர்கள் ஒரு வால்வோ வண்டியை திருடுகின்றனர், அதில் 40 குழந்தைகள், மற்றும் 4 பேர் இருக்கின்றனர், இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க இவர்களையும் செய்து கடத்தி காட்டு பங்களாவில் அடைத்து வைக்கின்றனர், இந்த குழந்தைகளை போலீஸ் தேட ஆரம்பிக்கிறது. பாலாஜி எதற்காக ஜெயிலுக்கு போனார், மற்றும் அவர் யார் என்பதும், போலீஸ் இந்த குழந்தைகளை மீட்டர்களா? இல்லையா? என்பதும்? , போலீஸ் தோட்டா ராஜேந்திரனை பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
கதையின் நாயகன் பாலாஜியின் நடிப்பு மிக எதார்த்தமாக நன்றாக நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் விமர்சகர் சரவண சுப்பையா நடித்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதனின் கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் நன்றாக உள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
ஒளிப்பதிவு ஓகே.
மொத்தத்தில் ஒரு கமர்சியல் படமாக அமைந்துள்ளது.
அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை