மதிமாறன் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் வெங்கட் செங்குட்டவன் நடிப்பில் மதிமாறன். மற்றும் இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதிமாறன் இப்படத்தை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன் பெண்களை குறிவைத்து கடத்தி கற்பழித்து கொல்கிறான். அதே நேரத்தில் கதையின் நாயகன் நெடுமாறன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான், அப்போது அவரின் அப்பா சொன்ன விஷயம் நியாபகத்திற்கு வருகிறது. அது என்னவென்றால், என்ன நடத்தலும் அக்காவை கைவிட கூடாது, என்று அவர் சொல்லியிருப்பார்.
காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்ற அக்கா மதியை பார்க்க நெடுமாறனும் சென்னை செல்கிறான். அங்கு அக்காவை பார்த்து அப்பா, அம்மா இறப்பிற்கு நீதான் காரணம் என்று கூறுகிறான். சென்னையில் நெடுமாறனின் முன்னாள் காதலி பிரபா போலீசாக இருக்கிறார், அவர் நெடுமாறனிடம் அந்த சைக்கோவை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார், அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதும், அந்த சைக்கோ கொலைகாரனை நெடுமாறன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
நெடுமாறன் கதாபாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளார் வெங்கட் செங்குட்டவன்.
எம் எஸ் பாஸ்கர் என் நடிப்பு நன்றாக உள்ளது ஒரு தகப்பனாக வாழ்ந்துள்ளார்.
ஆடுகளம் நரேன் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.
இவானா மிக அற்புதமாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
அக்கா தம்பி பாசம் உணரும் படமாக படம் அமைந்துள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லர் ஆகவே திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
அடுத்து என்ன என்பதை யூகிக்க முடியவில்லை திரைக்கதை மிக நன்றாக உள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை