IMG-20241225-WA0187

 

சற்று முன்

Greetings from School of Allied Health Sciences, Vinayaka Mission's Puducherry Campus ! | சீசா’ திரை விமர்சனம் ! | NEW AIR INDIA IN NEW YORK ! | Toyota Kirloskar Motor Scales Up Anganwadi Development Program to Benefit 400 New Centers in Ramanagara District ! | Samsung India Announces ‘Big TV Days’; Elevate the Future of Cinematic Experience with Exciting Offers on AI-Powered Premium TV Range ! | சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு ! | யமஹா தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு FZ சீரிஸ், ஃபேசினோ மற்றும் ரேZR மாடல்களில் சிறப்பு பொங்கல் சலுகைகளை அறிவிக்கிறது ! | iOS Devices At Greater Risk of Phishing Attacks: Lookout ! | கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன் ! | Yasmin Ponnappa Makes a Comeback to Cinema ! | லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது ! | School of Allied Health Sciences, Vinayaka Mission's Research Foundation (DU), Salem recognized as a "Gold Winner" in the private institution category by CII: ! | நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியீடு ! | Tata Motors flags off electric buses for workforce transportation in Pantnagar; reiterates its commitment towards carbon neutrality ! | SAMSUNG BETS BIG ON AC BUSINESS IN INDIA, SET TO LAUNCH NEW WINDFREE ! | "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது ! | க்ரைம் திரில்லர் படமாக "டெக்ஸ்டர்" தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் வெளி வருகிறது ! | ராஜா கிளி திரை விமர்சனம் ! | பல ஆண்டுகளாக கிடப்பிலிருந்த கொண்டங்கி- அகரம் மேம்பாலம் திறப்பு அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார் ! | வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது ! | திரு.மாணிக்கம் திரை விமர்சனம் ! | Croma Unveils the Superrr Exchange - Trade in Your Old Electronics for Triple the Benefits ! | Voltas brings back its iconic All-Weather Campaign this winter ! | நடிகர் சூர்யா நடிக்கும் ' ரெட்ரோ ' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு ! | ALLEN Career Institute Pvt ltd is celebrating its 4th edition of SOPAN at Anna centenary Library Chennai on 15th December 2024 !


சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !

 

IMG-20231217-WA0230

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில்,  நடிகர்  சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர். 

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர். 

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்று  “உடன்பால்” படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்,  இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர். 

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில்  உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லிய இந்த திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இத்திரையிடலின் போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் எழுந்து நின்று படக்குழுவினரைப் பாராட்டினர், மேலும் படக்குழுவினருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். படக்குழுவினர் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர். 

விமர்சகர்கள், ரசிகர்கள்,  திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் தளத்தில் ஓடிடித் தளத்தில்  பார்க்கக் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை

 

.com/img/a/