மூன்றாம் மனிதன் திரைவிமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகர் இயக்குனர் கதை ஆசிரியர் திரு பாக்யராஜ் அவர்கள் குணச்சித்திர வேடத்தில் மற்றும் நடிகை சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் மூன்றாம் மனிதன்.
ராம்தேவ் இயக்கத்தில் சோனியா அகர்வால், பாக்யராஜ், ஸ்ரீநாத், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மூன்றாம் மனிதன்.
இயக்குனர் ராம்தேவ் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.
போலீஸ் ஆய்வாளராக வருகிறார் பாக்யராஜ். அவரது பகுதியில் உட்பட்ட பல இடங்களில் கை, கால்கள் துண்டாக்கப்பட்ட மனித உடல் ஒன்று எடுக்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரிக்கிறார் பாக்யராஜ். எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் ராம்தேவை அழைத்து விசாரிக்கிறார் பாக்யராஜ்.
ராம்தேவ் அவரது வாழ்க்கையை விவரிக்கிறார்.. தான் நன்றாக வாழ்ந்து வந்ததாகவும் மதுப்பழக்கம் ஏற்பட்டதால் அதனாலே தனது குடும்பம் சீரழிந்துவிட்டதாகவும் பாக்யராஜிடம் கூறுகிறார்.
இறந்தது சோனியா அகர்வாலின் கணவரான போலீஸ் அதிகாரி என்று கண்டறிகிறார் பாக்யராஜ்.
தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இறுதியில் அந்த கொலை யாரால் நடந்தது.? எதனால் நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
மதுவால் ஏற்பட்ட இழப்பும், கள்ள உறவால் ஏற்படும் இழப்பும் நாட்டில் அதிகம் என்பதை இயக்குனர் இந்த படத்தின் மூலம் எடுத்து வைத்திருக்கிறார்.
இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கதாபாத்திரங்களை நன்றாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.
ராம்தேவின் நடிப்பு மிக நன்றாக உள்ளது.
கணவன் – மனைவி உறவை “மேட்டர்” என்று கூறி அந்த உறவை கொச்சைப்படுத்தி விட்டனர் என்று கூறலாம்.
ஆனாலும் இந்த உலகம் அதில் தான் இயங்குகிறது என்று இயக்குனர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பல வார்த்தைகள் படத்தின் போக்கை மாற்றியிருக்கிறது. அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை பயன்படுத்தியிருந்திருக்கலாம்.
ராம்தேவின் மனைவியாக நடித்திருந்தவர் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
மிக அற்புதமாக நடித்துள்ளார் இவ்வளவு சிறிய வயதில் மிக அனுபவம் வாய்ந்த நடிகை போல் நடித்துள்ளார்.
கள்ளக்காதலால் ஏற்படும் தவறுகள் குடும்ப சூழ்நிலை வன்முறை கணவன் மனைவி இடையே மூன்றாம் மனிதன் வந்தால் என்ன நடக்கும் என்பதை தெளிவாக இப்படத்தின் மூலம் இயக்குனர் காட்டியுள்ளார்.
கவர்ச்சியும் இப்படத்தில் உண்டு கள்ளக்காதல் சென்டிமென்ட் உணர்ச்சி அன்பு பாசம் அனைத்தும் இப்படத்தில் இயக்குனர் காட்டியுள்ளார்.
சொல்ல வந்த கருத்திற்கு கைதட்டல் கொடுக்கலாம். அதை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம் திரைக்கதையில்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.
கதையின் மையக்கருவிற்காக இயக்குனருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம் முக்கியமாக பெற்றோர்கள் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படம் மூன்றாம் மனிதன்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை