சற்று முன்



நந்திவர்மன் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் சுரேஷ் ரவி மற்றும் சின்னத்திரை இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஆஷா கவுடா நடிப்பில் நந்திவர்மன்  

இயக்குனர் ஜி வி பெருமாள் வரதன் (அறிமுக இயக்குனர்) இயக்கத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கவுடா , போஸ் வெங்கட் , நிழல்கள் ரவி   மற்றும் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜெரால்டு பெர்லிக்ஸ் இசையமைத்துள்ளார்.

நந்திவர்மன் வரலாற்றை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று முயற்சியில் ஈடுபடுகிறார்  போஸ் வெங்கட் குழுவினர். மிகப்பெரிய சிவன் சிலைகளையும் சிற்பிகளையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடும் இவர்களுக்கும் இவருடன் இருந்து அதை கைப்பற்ற நினைக்கும் சிலரின் சூழ்ச்சியும் இறுதியில் யார் வென்றனர் என்பதே இப்படத்தின் மீதி கதை  ?

இதற்கு உதவியாக காவல்துறை அதிகாரியாக சுரேஷ் ரவி நடித்துள்ளார். நன்றாக நடித்துள்ளார் சுரேஷ் ரவி.

நிழல்கள் ரவி  சிறிது நேரம் வந்தாலும் மிக அற்புதமாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

நந்திவர்மன் காலகட்டத்தில் என்ன நடந்தது அதை புதைந்ததை தோண்டி எடுக்கும் செயல்களில் ஈடுபடும் இவர்கள் அதை மிக அற்புதமாக காண்பித்துள்ளனர்.

மரகத பச்சை சிவன் லிங்கம் மற்றும் நடராஜர் சிலை போன்ற காட்சிகள் மிக அற்புதமாக காண்பித்துள்ளனர்.

நந்திவர்மன் வரலாற்றையும் அனைத்தும் இப்படத்தில் காண்பித்துள்ளனர்.

திரில்லர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக இருக்கிறது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று மிக ஆவலுடன் நாம் எதிர்பார்க்கலாம்.

ஆஷா கவுடா நடிப்பு நன்றாக உள்ளது.

கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

 இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் வி செயோன் முத்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். 

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

இத்திரைப்படம் சிவன் அடியர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது .

இத்திரைப்படத்தின் மூலம் இறுதியில் தர்மமே வெல்லும் என்று காண்பித்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை