அதுல்யா சீனியர் கேர்-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுடன் தொடரும் ஆனந்த சூழல் !
அதுல்யா சீனியர் கேர்-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுடன் தொடரும் ஆனந்த சூழல்
Chennai , 27th டிசம்பர் 2023 - மூத்த குடிமக்களுக்கான வாழ்விட தீர்வுகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னோடியாகத் திகழும் அதுல்யா சீனியர் கேர், அதன் குடியிருப்பு அமைவிடங்களில் மகிழ்வுடன் கிறிஸ்துமஸ் திருவிழாவை கொண்டாடியதோடு, அதனை மாபெரும் வெற்றி நிகழ்வாக ஆக்கியதற்காக தனது இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உள்ளுர் சமூகத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றியினை சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. அதுல்யாவின் குடியிருப்பு வளாகங்களில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வு கிறிஸ்துமஸ் திருவிழாவின் உண்மையான உணர்வின் அம்சங்களான அன்பு, ஆனந்தத்தின் வெளிப்பாடான சிரிப்பு மற்றும் ஒருங்கிணைவின் குதூகலம் ஆகியவற்றின் சிறப்பான கலவையை நேர்த்தியாக வெளிப்படுத்தியது.
கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டியும், அதற்கு முன்பும் மற்றும் பின்பும் விடுமுறை சீஸன் தொடங்குவதால் எமது வளாகங்களில் வாழும் மூத்த குடிமக்களுக்காகவும் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் இனிமையான, பசுமையான தருணங்களை உருவாக்கும் செயல்திட்டத்தை அதுல்யா சீனியர் கேர் உருவாக்கி செயல்படுத்தியது. அதன் ஒரு அங்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மறக்கவியலாத அனுபவத்தை அனைவருக்கும் வழங்கியது. திருவிழா கொண்டாட்ட நிகழ்வுகளோடு ஆனந்தமான செயல்பாடுகளும் ஒருங்கிணைந்த அற்புத அனுபவத்தை அது அவர்களுக்கு வழங்கியது.
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் ட்ரீயை, வளாகத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் ஒளிவிளக்குகளைக் கொண்டு ஒளிரச்செய்த நிகழ்வோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கின. அதுல்யா குடியிருப்பு வளாகங்கள் முழுவதிலும் ஒளிவிளக்கின் வெளிச்சத்தோடு, மகிழ்ச்சியையும் பரவச்செய்யும். ஒரு சிறப்பான பாரம்பரியம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான கிறிஸ்து பிறப்பு பாடல்களை (கேரல்) ஒருங்கிணைந்து பாடுவதற்காக குடியிருப்புவாசிகளும், பணியாளர்களும் மற்றும் குடும்பத்தினர்களும் ஒருங்கிணைந்தது இந்த மகிழ்ச்சியான சீஸனின் உணர்வை இசையின் மூலம் வெளிப்படுத்தியது. கிறிஸ்துமஸ் திருவிழாவின் மாயாஜாலத்தை இசைப்பாடல்களின் மூலம் வெளிப்படுத்திய இசை விருந்தாக அது அமைந்தது.
கொண்டாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக நாக்கின் சுவை நரம்புகளுக்கு தீனி அளிப்பதாக கிறிஸ்துமஸ் விருந்து அமைந்தது. சுவையான குக்கீஸ்களுடன், குளிருக்கு இதமான பானங்கள் அதில் இடம்பெற்றன. கிறிஸ்துமஸ் சீஸனின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் எமது சமையல் கலைஞர்கள் சுவையான பல்வேறு உணவு வகைகளை சமைத்து கொண்டாட்ட மகிழ்ச்சியை மேலும் சுவையானதாக ஆக்கினர்.
எந்தவொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ என அழைக்கப்படும் சாண்டா கிளாஸ் வருகை இல்லாமல் நிறைவடையாது என்பதுதானே உண்மை. அதை நிஜமாக்கும் வகையில் தங்களது கிறிஸ்துமஸ் விருப்பங்களையும், ஆசைகளையும் சாண்டா கிளாஸ் உடன் குடியிருப்புவாசிகளும் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களும் பகிர்ந்து கொண்டனர். சாண்டா கிளாஸ் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட நிழற்படங்கள், இந்த ஆனந்தமான தருணங்களை அழகாக படம்பிடித்து எப்போதும் பசுமையாக பாதுகாக்க வேண்டிய நினைவுப்பொருட்களாக நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதுல்யா சீனியர் கேர் வளாகமே அழகான அலங்கரிப்பு பொருட்கள் கண்சிமிட்டும் விளக்குகள் என கொண்டாட்டத்தின் மகிழ்ச்சிக்கு கூடுதலாக வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்தன. நமது மூத்த குடிமக்கள் வாழும் சூழல் கனிவானதாகவும், தோழமையானதாகவும் எப்போதும் இருக்க வேண்டுமென்ற அதுல்யாவின் குறிக்கோளை செயல்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த சமூகத்தினரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் உற்சாகத்தோடு பங்கேற்றனர்.
‘‘எமது குடியிருப்புவாசிகளுக்கு அதுவும் குறிப்பாக இந்த விடுமுறை கால சீஸனின்போது கனிவும், குதூகலமும் நிறைந்த இனிய சூழலை உருவாக்குவதில் அதுல்யா சீனியர் கேர்-ல் நாங்கள் நம்பிக்கையும், அக்கறையும் கொண்டிருக்கிறோம். எங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல; எமது குடியிருப்புவாசிகளுக்கும், குடும்பங்களுக்கும் மற்றும் சமூகத்தினருக்கு ஒருமனதோடு ஒருங்கிணைந்து வருவதற்கும் இந்த காலத்தின் ஆனந்தத்தை பகிர்ந்துகொள்ளவும் மற்றும் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பசுமையான நினைவுகளை உருவாக்குவதற்கும் இதுவொரு சிறப்பான வாய்ப்பாக இருந்தது’’ என்று அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஜி. சீனிவாசன் கூறினார்.
முதியோர்களுக்கு வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு பிரத்யேகமான வாழ்விடத் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக அதுல்யா சீனியர் கேர் செயலாற்றி வருகிறது. தனிப்பயனாக்கப்பட்ட பிரத்யேக அக்கறை, பராமரிப்பு புத்தாக்க செயல்திட்டங்கள், ஆதரவான பணியாளர்கள் மற்றும் அன்பையும், ஆதரவையும் சேர்த்து வழங்கும் சமூகத்தினர் வழியாக இங்கு வசிக்கும் அனைவரும் உற்சாகத்தோடும், கண்ணியத்தோடும் தங்கள் வாழ்க்கையின் பொன்னான ஆண்டுகளை மனநிறைவோடு வாழ்வதற்கு குடும்பவீடு போன்ற நல்ல சூழலை அதுல்யா சீனியர் கேர் வழங்கி வருகிறது.
கருத்துகள் இல்லை