சற்று முன்



பைட் கிளப் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான உரியடி விஜயகுமார் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டில் பைட் கிளப்.

இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பைட் கிளப். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜயகுமார் நடித்திருக்கிறார். இவன் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். சென்னை அருகில் உள்ள பழவேற்காடு பகுதியை கதைக்களமாக கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் சிறந்த குத்துச்சண்டை வீரராக பெஞ்சமின் இருக்கிறார். இவர் தன்னுடைய ஏரியாவில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரராக கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அந்த சிறுவர்களுக்கு எல்லாம் போதைப் பொருள் கொடுத்து தொழிலில் ஈடுபடுத்துகிறார் வில்லன் கிருபாகரன். இதை பெஞ்சமின் தட்டிக் கேட்டவுடன் வில்லன் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

பின் கிருபா உடன் சேர்ந்து ஜோசப் தன்னுடைய அண்ணன் பெஞ்சமினை கொலை செய்கிறார். அதற்கு பிறகு ஒரு கட்டத்தில் ஜோசபையை கிருபா ஏமாற்றி அரசியல்வாதியாக மாறுகிறார். அது மட்டும் இல்லாமல் அந்த ஏரியாவையும் தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வருகிறார். இதை உணர்ந்த ஜோசப் இளைஞனாக இருக்கும் விஜயகுமாரை வைத்து கிருபாவை பழி வாங்க திட்டம் போடுகிறார். இறுதியில் கிருபா கொல்லப்பட்டாரா? இல்லையா? பெஞ்சமின் கனவு நிறைவேறியதா? இளைஞர் விஜயகுமார் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை.

இளைஞர்கள் வாழ்க்கையில் போதைப்பொருள், அரசியலாக மாறினால் என்ன நடக்கும் என்பதை இயக்குனர் காண்பித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக வரும் விஜயகுமார் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தார். இவர் ஏற்கனவே உரியடி என்ற படத்தின் மூலம் ஜாதிய அரசியல் பற்றி பேசி மக்கள் கவனத்தை ஈர்த்து இருந்தார். தற்போது சாதிக்க துடிக்கும் இளைஞராக ஆக்ரோஷமாக தன்னுடைய நடிப்பை ஸ்கோர் செய்து இருக்கிறார்.

அதிரடி ஆக்சன் ஆக இயக்குனர் கதையை கொண்டு சென்று இருக்கிறார். ஆனால், நிறைய பரிச்சயம் இல்லாத முகங்கள் என்பதால் மக்கள் மத்தியில் ஈர்ப்பை கொஞ்சம் குறைத்து இருக்கிறது. வில்லனாக வரும் ஜோசப் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல் படத்தில் கதாநாயகி வரும் மோனிஷா எதற்கு இவர் என்று சொல்வதற்கு ஏற்ப இருக்கிறார். 

பாடல்கள் பெரிதாக ஒரு ஒர்கவுட் ஆகவில்லை. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இடையில் சலிப்பை ஏற்படுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாதி யூகிக்கக்கூடிய காட்சிகளே இருக்கிறது. ஒரே வட்டத்திற்குள் கதை சென்று கொண்டு இருப்பதால் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஆங்காங்கே வடசென்னை சாயல் எட்டிப் பார்த்திருக்கிறது. 

ஒளிப்பதிவு மிக அற்புதமாக உள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு மிக பக்க பலமாக அமைந்துள்ளது.

நடிகர் விஜயகுமாரின் நடிப்பு பிரமாதம் கதை கேட்ப மிகக் கச்சிதமாக பொருந்தியுள்ளார். 

மற்ற கதாபாத்திரங்களும் நடிகர்கள் கொடுத்த வேலையை மிக நன்றாக நடித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 /5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை