சற்று முன்



நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம் !

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம் !

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர விளம்பர பலகைகளில் இடம்பிடித்த  அனிமல் படப்பாடல் !!

ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் அர்ஜன் வைலி  பாடல் NYC மற்றும் LA இல் விளம்பர பலகைகளை அலங்கரித்துள்ளது ! 

நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகிய இப்படம், பாக்ஸ் ஆபிஸில் உலகளாவிய வசூல் மூலம் பல சாதனைகளை முறியடித்து வரும் அதே வேளையில், சர்வதேச அளவில்  அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடதக்கது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் அனிமல் படப்பாடலான அர்ஜன் வைலி, விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் ஹோர்டிங்குகளில் இடம்பெற்றுள்ளது. இந்த இடங்களில் இசைக்கப்படும் முதல் இந்தியப் பாடல் இதுவாகும். உலகம் முழுவதும் அர்ஜன் வைலி பாடல், பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுதுடன் எட்டுதிக்கும் கேட்கும் பாடலாக சாதனை படைத்து வருகிறது.  அனிமல் படத்தின் சாதனைகள் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகின்ற நிலையில், வரும் நாட்களில் இந்தப் படம் இன்னும் பல புதிய சாதனைகளைச் செய்யும் என எதிர்பார்க்கலாம். 

பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து  அனிமல் படத்தைத் தயாரித்துள்ளன. க்ரைம் டிராமா வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்களை திரில்லான ஒரு புதிய அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படம் 1 டிசம்பர் 2023  அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.


கருத்துகள் இல்லை