சூரகன் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் அறிமுக நாயகனாக களம் இறங்கி இருப்பவர் கார்த்திகேயன் இவர் நடிப்பில் சூரகன்
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சதிஷ் கீதா குமார் இயக்கியுள்ளார்
கதையின் நாயகன் கார்த்திகேயன் காவல் அதிகாரியாக இருக்கிறார், இவருக்கு நடந்த ஒரு விபத்தில் பார்வையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சூழ்நிலையில் இவர் எதிரிகளை சுடும்போது எதிர்பாராமல் ஒரு பெண்ணை சுட்டு விடுகிறார், இதனால் இவரின் வேலை போகிறது. ஒருநாள் இவர் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ஒருபெண் அடிபட்டு கிடப்பார், அவரை மருத்துவமனையில் சேர்பதற்குள் அவர் இறந்துவிடுகிறார்.
நிழல்கள் ரவியின் பேத்தியும் மர்மமான முறையில் இறந்திருப்பார், இவர் கார்திகேயனிடம் தன் பேத்தி இறப்பிறகு யார் காரணம் என தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்க சொல்கிறார். இந்த கேஸை பற்றி விசாரிக்கும் சமயத்தில் மற்றொரு பெண் மர்மமான முறையில் இறக்கிறார். இந்த 3 பெண்களின் இறப்பிற்கு என்ன தொடர்பு என்பதையும், இந்த கொலைக்கெல்லாம் யார் காரணம் என்பதை கதையின் நாயகன் கார்த்திகேயன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
கார்த்திகேயன் நடிப்பு பிரமாதம்.
நிகழல் ரவி மிக எதார்த்தமாக கதை கேட்ப கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
மன்சூர் அலிகான் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் அவர் கொடுத்த வேலை மிகக் கச்சிதமாக செய்துள்ளனர்.
ரேஷ்மாவின் நடிப்பு நன்றாக உள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை