சற்று முன்



தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!

தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா !

தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். 

விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல்,  சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி  தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார்.

கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மலைவாழ் மக்களுக்காக தன் சொந்த செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி தந்தார். நகைச்சுவை நடிகராக வளர்ந்து வரும் பாலா தொடர்ந்து பல  சமூக சேவைகளை செய்து வருகின்றார். 

தற்போது சென்னையில் பெரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திரு. பாலா அவர்கள்* -  நேற்று மாலை - அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர்,  பம்மல் ,  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிககப்பட்ட மக்களுக்கு - குடும்பத்திற்கு தலா ( 1000 ) ரூபாய் வீதம் - 200 குடும்பங்களுக்கு..  மொத்தமாக 2,00,000 ( இரண்டு லட்சம் ) உதவித் தொகை வழங்கியுள்ளார். 

பலரும் வீட்டை விட்டே வெளியே வர தயங்கி முடங்கி உள்ள நிலையில், தெருவில் இறங்கி உதவுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பாலாவின் செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை