சற்று முன்



ஆட்டோ ஓட்டுநர்களின் பொது சேவை குறித்த யூ ட்யூப் கானா பாடல் வெளியீடு !

ஆட்டோ ஓட்டுநர்களின் பொது சேவை குறித்த யூ ட்யூப் கானா பாடல் வெளியீடு !

ஆட்டோ ஓட்டுநர்களின் பொது சேவை குறித்த யூ ட்யூப் கானா பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இயல் இசை நாடக மன்றத்தில் நடைபெற்றது

" வாம்மா வாரேம்மா சவாரி " என்னும் ஆட்டோ ஓட்டுநர்களின் பொது சேவை குறித்த இந்த  யூடுப் பாடலை கானா செல்வம் இயற்றியுள்ளார்.


திமுக கலை , இலக்கிய , பகுத்தறிவு பேரவையின் தலைவரும் தமிழ்நாடு இயல் , இசை , நாடக மன்ற தலைவருமான வாகை சந்திரசேகர் வெளியிட  மாநில சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவரும் திமுக கலை ,இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் செயலாளர் முனைவர் இறையன்பன்  குத்தூஸ்  பெற்றுக்கொண்டார் .


இந்நிகழ்ச்சியில்  சென்னை தென்மேற்கு மாவட்ட கலை, இலக்கிய , பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் சண்முகநாதன் ,    மாவட்ட துணை அமைப்பாளர் எஸ். லட்சுமிகாந்தன்,       இசையமைப்பாளர் ஜெர்ரி பிராங்கிளின் , பாடகர் கானா வினோத் , எடிட்டர் கே .ஆர் .செல்வம் , பி .மாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை