சற்று முன்



பிரபாஸின் ஸ்பிரிட் பட அப்டேட் தந்த நந்தமூரி பாலகிருஷ்ணா !

பிரபாஸின் ஸ்பிரிட் பட அப்டேட் தந்த நந்தமூரி பாலகிருஷ்ணா 

பிரபாஸின் ஸ்பிரிட் 2024 ல் வெளிவருகிறது.

அனிமல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படக்குழு எட்டுதிக்கும் பறந்து புரமோசனில் ஈடுபட்டு வருகிறது. நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே படக்குழு கலந்துகொண்டபோது, அவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து  பிராபாஸை வைத்து இயக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டது தற்போது வைரலாகி வருகிறது.  

அன்ஸ்டாப்பபிள் வித் என் பி கே நிகழ்ச்சியில், தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ் பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது ?” எனக்கேட்க, அதற்கு இயக்குநர், “ ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பத்திரிக்கையிடம் பேசிய தயாரிப்பாளர் பூஷன் குமார், “இப்போது, பார்வையாளர்களுக்கு அனிமல்  படத்தை நல்ல முறையில் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன் பிறகே, நாங்கள்  ஸ்பிரிட் படத்தை தொடங்குவோம், ஐந்து முதல் ஆறு மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, பிறகு ஸ்பிரிட்டைத் தொடங்குவோம். என்றார். மேலும் இந்த பேட்டியின் போது, ரன்பீர் கபூர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் பங்குபெற வேண்டும் என்ற தனது விருப்பர்தையும் தெரிவித்தார்.  

இந்நிலையில்  நடிகர் ரன்பீர்கபூர்  , “அவரது (சந்தீப் ரெட்டி வங்கா) அடுத்த படம் பிரபாஸுடன், அப்படத்தில் அவர் எனக்காக ஒரு சிறிய பாத்திரம் உருவாகினால், நான் அதன் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். என்றார். 

பிராபஸின் பிரம்மாண்டமான  ஸ்பிரிட் படத்தின் புதிய  அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


கருத்துகள் இல்லை