குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி !
குய்கோ பட டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி !
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்க, இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அருள் செழியன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
இப்படம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை