சற்று முன்



சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும் நெப்போலியன் !

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் நெப்போலியன் !

ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடித்த பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடி காவியம் இது.  பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் தளர்வுறாப் பயணத்தைப் பற்றியும்,  அவர் மிகவும் நேசித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  நெப்போலியனின் தொலைநோக்கான இராணுவ மற்றும் அரசியல் தந்திரத்தைத் திரைக்கதை எடுத்தியம்ப, இதுவரை வெள்ளித்திரையில் முயற்சி செய்திராத எதார்த்தமான போர்க் காட்சிகளால் சிலிர்ப்பூட்டுகிறது படம்!

*கதைச்சுருக்கம்* – பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால் பிரிட்டிஷ் துருப்புக்களை விரட்டியடித்து, அதன் மூலம் 1793 இல் தூலொன் முற்றுகையை சமாளிப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. நெப்போலியனின் தொடர் வெற்றிகளால், 1795 இல், அரசியல் அதிகாரமட்டத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கிடையில், அவர் உயர்குடியைச் சேர்ந்த விதவையான ஜோசஃபின் (வனேசா கிர்பி) உடன் அறிமுகம் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். 

பிரமிடுகளின் போர், ஆஸ்டர்லிட்ஸ் போர், போரோடினோ போர் முதலிய போர்களின் வாயிலாகத் தனது அதிகாரத்தையும் சக்தியையும் பலப்படுத்துகிறார். 1815 ஆம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில், வெலிங்டன் பிரபுவாலும், மார்ஷல் ப்ளூச்சராலும் அவர் தோற்கடிக்கப்படுகிறார். செயின்ட் ஹெலினா தீவுக்கு நாடு கடத்தப்படும் நெப்போலியனை, 1821 இல் மரணம் தழுவியது.

CREDITS :

இயக்கம் - Ridley Scott

இசை - Martin Phipps 

ஒளிப்பதிவு - Dariusz Wolski

_பாரீஸில், இப்படத்தின் பிரத்தியேக காட்சி, நவம்பர் 14, 2023 அன்று ஒளிபரப்பப்பட்டது._

*சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா*, இப்படத்தை ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடுகிறது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை