கபில் ரிட்டன்ஸ் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் அனைத்தையும் கதை திரைக்கதை வசனம் நடித்து இயக்கியுள்ளார்கள் அது போன்ற வரிசையில்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
டாக்டர். ஸ்ரீனி செளந்தரராஜன் நடிப்பில்
கபில் ரிட்டன்ஸ்
மகன் இன்ஜினியராக வேண்டும் என்று தந்தையும் டாக்டராக வேண்டும் என்று தாயும் கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள். ஆனால் மகன் மொபைல் போன், வீடியோ கேம் போன்ற இதர விளையாட்டுக்களில் மூழ்கி விடுகிறான். திடீரென கிரிக்கெட்
விளையாடும் வாய்ப்பு மகனுக்கு வருகிறது. தந்தை வேண்டாம் என்று மறுக்கிறார். இருப்பினும் தான் ஒரு கொலை குற்றவாளி என அடிக்கடி நினைத்து மனம் வருந்தி மன உலச்சலுக்கு ஆளாகிறார். இதை அறியும் மனைவி ஏன் என ஆராய்வது தான் கதையின் திருப்பு முனையாக அமைகிறது. எப்படி அதை தீர்க்கிறார் கணவனின் பிரச்சனையை எப்படி அவர் கையாளுகிறார் என்பதே இப்படத்தின் கதை.
மகனுக்கும் தந்தைக்கும் பாசப்போர்தான் இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்.
தந்தை பற்றி அறியாமல் மகன் உதாசீனப்படுத்தும் காட்சிகள் அனைவரது மனதையும் புண்படுத்தும் ஆனாலும் தந்தை மிகப்பெரிய சிறந்த வீரர் என்று மகன் அறியும்போது அந்த காட்சி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.
கப்பிலாக வேண்டும் என்று கனவோடு இருந்த மனிதருக்கு கப்பில்தேவாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அதுவே திரைப்படத்தின் வெற்றி.
கதையின் நாயகனாக டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்
(அசோக்) கதாபாத்திரத்தில்
நடிக்கிறார்.
அவரது கதாபாத்திரம் அனைவரது மனதிலும் நின்றுள்ளது ஏனென்றால் சிறுவயதில் அனைவரும் கிரிக்கெட் விளையாடி உள்ளனர் நாம் எல்லோரும் அப்பொழுது நமக்கு தோன்றும் இவர்களைப் போல நாம் ஆக வேண்டும் என்று அந்த நினைவூட்டை நமக்கு தோன்றி விட்டார்.
நிமிஷா(மீரா), மிக நன்றாக நடித்துள்ளார் இது போன்ற மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லுவார்கள் இப்படத்தில் மனைவி கதாபாத்திரம் அது போன்ற உள்ளது.
பருத்திவீரன் சரவணன் கதாபாத்திரம் இப்படத்திற்கு முக்கியமானவை.
அவர்கள் கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளார். ரியாஸ்கான் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது. அவருக்கு கொடுத்த வேலை மிகக் கச்சிதமாக செய்துள்ளார்.
வையாபுரி சிறிது நேரம் வந்தாலும் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார்.
மாஸ்டர் பரத்,
மாஸ்டர் ஜான் , சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி மற்ற கதாபாத்திரம் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை
நன்றாக உள்ளது.
எடிட்டிங்-வில்சி மற்றும்
நடனம்-சங்கர் சிறப்பாக காட்சி அமைத்துள்ளார்.
சண்டை பயிற்சி நன்றாக உள்ளது.
கதை திரைக்கதை வசனம் அனைத்தும் நன்றாக உள்ளது.
இயக்கம் டாக்டர். ஸ்ரீனி செளந்தரராஜன் மிக நன்றாக இயக்கியுள்ளார்.
கிரிக்கெட் ஒரு கனவாக வாழ்ந்த இளைஞர்களுக்கு இத்திரைப்படம் ஒரு சமர்ப்பணம்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை