தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது, சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த கிடா (Goat) திரைப்படம் !
தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது, சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த கிடா (Goat) திரைப்படம் !!
வரவேற்பைக் குவிக்கும் கிடா டிரெய்லர் !!
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது.
கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.
உலகளவில் பாராட்டுக்களை குவித்த இப்படம் இறுதியாக, நம் தமிழக ரசிகர்களை தீபாவளி திருநாளில் மகிழ்விக்கவுள்ளது.
பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.
தொழில் நுட்ப குழு விபரம்
ஆடியோகிராஃபி - தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் : ஏகாதசி
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இயக்கம் : ரா. வெங்கட்
https://youtu.be/L61LJxF_MyQ
கருத்துகள் இல்லை