சற்று முன்



சமாரா திரை விமர்சனம் !

சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் சினு சித்தார்த்  ஒளிப்பதிவில் தீபக் வாரியர் இசையில் நடிகர்கள் ரகுமான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்யா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “சமாரா”.

ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு வைரஸ் கண்டுபிடிக்கிறார். அந்த வைரஸ் மக்களை எப்படி பாதித்தது,பிறகு ஏன் அவர் அந்த வைரஸை தடை செய்தார் என்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் தற்போதைய காலத்தில் உள்ள ஒரு சைன்டிஸ்ட் அந்த வைரஸை கண்டுபிடித்து மீண்டும் ஒரு பயோ வார் நடத்த அதர்க்கான வேலையை செய்துகொண்டிருக்கிறார்.

படம் முழுவதும் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ரகுமான், தீவிரவாதி ஒருவனை டார்கெட் செய்கின்றனர். அவன் தப்பித்து விடுகிறான்.

அதே சமயத்தில், மற்றொரு தீவிரவாதியும் லோக்கல் ரவுடி ஒருவரும் பிணமாக ஒரு இடத்தில் கிடக்கின்றனர். உடல் அழுகிய நிலையில்.

இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் இராணுவத்தில் பணிபுரிந்த பினோஜ் வில்யா தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் விஷ வாயு தாக்கி உடல் முழுவதும் தோல் நோய் பரவி விடுகிறது. பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.

இதனால், மனைவி மகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார். அவ்வப்போது மகள் சஞ்சனாவை பார்த்து மட்டும் வருகிறார் பினோஜ்.

இந்த வைரசால் சஞ்சனா பெண் பாதிக்கபடுகிறார். அவரின் தந்தை ஒரு ராணுவ வீரர் என்பதனால் அவருக்கு இந்த வைரஸை பற்றி சில விஷயங்கள் தெரிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தன் மகளை தனிமை படுத்தி பார்த்துக்கொள்கிறார். இந்த பயோ வாருக்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பதும், அதனை தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

ரகுமானின் நடிப்பு நன்றாக உள்ளது அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இடைவெளிக்குப் பிறகு பரத் வந்தாலும் பரத்தின் கதாபாத்திரம் சிறிது நேரமாக இருந்தாலும் மிக நன்றாக நடித்துள்ளார்.

மற்றும் நடிகர்கள் அனைவரது கதாபாத்திரமும் நன்றாக உள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இத்திரைப்படம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டும் கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். 

மிக அழகாக இயக்குனர் கதைக்களத்தை இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை