சற்று முன்



புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம் !


திரைபிரபலங்களின்  மத்தியில் பிரசித்திப் பெற்ற "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம் !

புதுச்சேரி மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்த "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது, புதுச்சேரியில் நான்கு கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் "புதுச்சேரி காமாட்சி " உணவகம் சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கப்பட்டது, தற்போது மக்களின் பேரதரவுடன் புதுப்பொலிவுடன் அசோக் பில்லரில் 75 இருக்கை வசதிகளுடன் மிகப்பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை பற்றி "புதுச்சேரி காமாட்சி " உணவகம் உரிமையாளர் திரு.அக்கேஷ் ராஜ் அவர்கள் கூறிய பொது :-

60 வருடத்திற்கு முன் கடலூரில் எனது தாத்தா பாட்டி  'மதுரை முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் உணவகம் தொடங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். அதன் பின் 2003ம் ஆண்டு புதுச்சேரியில் நான் தொழில் தொடங்க நினைத்தபோது எனது தாத்தா பாட்டி வழியிலேயே உணவகம் தொடங்கலாம் என முடிவு செய்தேன், அதற்கு புதிய பெயரை கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன் அதனால் எனது உணவகத்திற்கு "புதுச்சேரி காமாட்சி " என்று பெயர் வைத்து துவங்கிய பின் மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் நான்கு கிளைகளை நடத்தி வருவதுடன் சென்னையிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கினேன், தொடக்கத்தில் நன்றாக வரவேற்பு கிடைத்தது தற்போது அதனை விட பல மடங்கு உத்வேகத்துடன் மீண்டும் புதுப்பொலிவுடன்  துவங்கியுள்ளேன்", என்றார் அவர்.

மேலும் அவர் கூறுகையில், "புதுச்சேரி கடலூர் சரகத்தில் எந்த திரைப்பட படப்பிடிப்பு நடந்தாலும் எங்கள் உணவத்திலிருந்து தான் உணவுகள் செல்லும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, சிவகார்த்திகேயன்  உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் எங்கள் உணவத்தின் உணவை கேட்டு விரும்பி வாங்கி சென்றுள்ளார்கள் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமையாகவும் உள்ளது", என்றார்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை