இறுகப்பற்று திரை விமர்சனம்!
தமிழ் சினிமா உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம் பிரபு மற்றும் விதார்த், ஸ்ரீ , சர்தா ஸ்ரீநாத், அபர்னதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த கதைக்களத்தில் 3 விதமான ஜோடிகள் இருக்கின்றனர், அவர்களுக்கு 3 விதமான பிரச்சனைகள் இருக்கிறது. இதில் மனோ & மித்ரா ஜோடி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்ட ஜோடி. மித்ரா திருமணமானவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குபவராக இருக்கிறார். மித்ராவிடம் அர்ஜுன் & திவ்யா ஜோடி ஆலோசனை பெற வருகின்றனர். இவர்களுக்குள் காதலிக்கும்போது இருந்த அந்த புரிதல், திருமணத்திற்கு பின் இல்லை என்பதுதான் இவர்களின் பிரச்சனை.
மித்ராவிடம் ஆலோசனை பெற வரும் மற்றொரு ஜோடி ரங்கேஷ் & பவித்ரா. பவித்ராவின் உடல் எடை அதிகமாக இருப்பதால் ரங்கேஷ் – க்கு பிடிக்காமல் போகிறது. ஆதலால் விவாகரத்து ஆகும் அளவிற்கு இந்த பிரச்சனை வந்து நிற்கிறது. மனோவிற்கு, மித்ராவிடம் சின்ன சின்ன சண்டை போட ஆசை, அந்த ஆசையே ஒருகட்டத்திற்கு மேல் இவர்களுக்குள் பிரச்சனை வர காரணமாக இருக்கிறது. கடைசியில் இந்த மூன்று ஜோடிகளின் பிரச்சனை தீர்ந்து ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் யுவராஜ் தயாளன் இன்றைய சமூகத்தில் திருமணமானவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையையும், அதற்கான தீர்வையும் அழகாக கூறியுள்ளார்.
விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது அவரது நடிப்பை எதார்த்தமாக உள்ளது.
ஸ்ரீ இன் கதாபாத்திரம் இயல்பாக அனைவரது வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய சம்பவமாகவே தோன்றுகிறது.
விதார்த் மற்றும் அபர்நிதியின் கதாபாத்திரம் எதார்த்தமானவை எதார்த்தமாக அனைவரது வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய சம்பவங்களாகவே இருக்கிறது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை