நானி 31' எனும் படத்தில் பன்முக திறமைமிக்க நடிகரான எஸ். ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் !
நேச்சுரல் ஸ்டார் நானி- திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்து உருவாக்கும் 'நானி 31' எனும் படத்தில் பன்முக திறமைமிக்க நடிகரான எஸ். ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் !
நேச்சுரல் ஸ்டார் நானியும், 'அந்தே சுந்தரானிகி' போன்ற கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா 'நானி 31' படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 'ஆர் ஆர் ஆர்' போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படத்தை தயாரித்த டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
'நானி 31' தொடர்பாக ஒரு சிறிய அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதன் மூலம் படக் குழு தங்களின் திட்டத்தையும் விவரித்தது. இதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் தங்கள் இரண்டாவது பயணத்தில் இந்த முறை வித்தியாசமான படைப்பை தருவதற்கு முயற்சிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தற்போது 'நானி 31' படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா அசுரத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவே பெயர் பெற்றவர். அதாவது விவேக் ஆத்ரேயா போன்ற இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடிக்கவிருப்பதால் வித்தியாசமான நடிகராக இவர் திரையில் தோன்றுவார் என்ற எதிர்பபார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
'நானி 31' இம்மாதம் 23ஆம் தேதியும், பூஜை 24 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய உற்சாகமான அப்டேட்டுகளும் தொடர்ந்து வரவிருக்கிறது.
கருத்துகள் இல்லை