IMG-20250311-WA0245

 

சற்று முன்

SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre ! | ஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் - மர்மர் இயக்குநர் வேண்டுகோள் ! | Blue Star expands its comprehensive range of Commercial Refrigeration solutions to meet growing demands ! | ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா ? | பிரபல நடிகை ரேஷ்மா பசுபலேட்டி பங்குபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியை வசந்த் & கோ உடன் பஜாஜ் கொண்டாடியது ! | அவ்னி மூவிஸ் - பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது ! | How Millets Can Redefine Your Wholesome Goals in 2025 ! | AIR INDIA EXPRESS WELCOMES ITS 100TH AIRCRAFT; DOUBLES FLEET IN JUST TWO YEARS ! | எமகாதகி" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! | ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் மர்மர் ! | கல்வித் துறையில் ரோபோடிக்ஸ்.. மைபோட் (MiBOT) வென்ச்சர்ஸ் புதிய புரட்சி ! | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி ! | "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா ! | All-women crew operated Air India Express’ Chennai - Pune flight ! | THIS WOMEN’S DAY, TANISHQ’S ‘HER CHOICE’ SPARKS A NEW DIALOGUE ON EMPOWERMENT ! | AIR INDIA GROUP MARKS INTERNATIONAL WOMEN’S DAY ! | படவா திரை விமர்சனம் ! | மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் ! | ஜென்டில்வுமன் திரை விமர்சனம் ! | Rockstar DSP is set to make Bengaluru vibe to his rhythm ! | பிண்டு கி பாப்பி" என்ற திரைப்படம் இப்பொழுது கிஸ் கிஸ் கிஸ்ஸிக்" என்ற பெயரில் வெளியாகிறது ! | கிங்ஸ்டன் திரை விமர்சனம் ! | நிறம் மாறும் உலகில் திரை விமர்சனம் ! | மர்மர் திரை விமர்சனம் ! | MARRIOTT INTERNATIONAL CELEBRATES AN OUTSTANDING YEAR IN SOUTH ASIA WITH RECORD-BREAKING DEALS AND STRONG 2024 BUSINESS PERFORMANCE !


காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டில் PCOS விழிப்புணர்வுக்கான பேரணி MLA திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது !

IMG-20230925-WA0128

காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டில் PCOS விழிப்புணர்வுக்கான பேரணி MLA திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது  !

IMG-20230925-WA0130

சென்னை, செப்டம்பர் 24,2023: ரேடியல் ரோட்டில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS) பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் நோக்கத்தோடு, ஞாயிற்றுக்கிழமை அன்று PCOS விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணியை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். PCOS பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுபட்டு இதில் பங்கேற்றனர். பிரபல தமிழ் நடிகைகள் பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் ஆல்யா மானசா ஆகியோரும் இந்த பேரணியில் பங்கேற்று அனைவரையும் ஊக்குவித்தனர்.

IMG-20230925-WA0131

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த 4 கி.மீ PCOS பேரணியில் சமூக தொண்டு நிறுவனங்கள் (NGOs), கல்லூரிகள், நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என ஆண்களும் பெண்களுமாக அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். கோவிலம்பாக்கத்தில் உள்ள 200 அடி ரேடியல் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் PCOS பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் வகையில் விழிப்புணர்வு பற்றிய முழக்கங்கள் எழுப்பியும், விழிப்புணர்வு வசனங்களை கொண்ட பலகைகளை ஏந்தியும் நடந்து சென்றனர்.

IMG-20230925-WA0163

காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும்  செயல் தலைவருமான டாக்டர் எஸ். சந்திரகுமார் பேசுகையில், ’’ரேடியல் ரோடு காவேரி மருத்துவ மனையில், மா காவேரி என்ற பெயரில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேகமான மையத்தில் பெண்களுக்கு தேவையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த மையத்தில் PCOS கிளினிக்கைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பெண்கள் உரிய மருத்துவ பராமரிப்பைப் பெற்று, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திட,  வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கி ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பேரணி நடத்தப்படுகிறது,’’ என்று கூறினார்.

ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனையின் மகப்பேறியல் & மகளிர் நோய் மூத்த மருத்துவ நிபுணர் மற்றும் மருத்துவ தலைவர் டாக்டர் கே. தென்றல் பேசுகையில்,  PCOS நோய்க்காக உரிய நேரத்தில் சிகிச்சை எடுப்பதன் முக்கியத்தை வலியுறுத்தினார். “PCOS என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு சாதாரணமான நிலைமை. இதைக் குணப்படுத்த மருத்துவ மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் அறிகுறிகளை கண்டறிந்து, தகுந்த மருத்துவ பராமரிப்பை வழங்கி, வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப் பிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பெண்களுக்கு ஏற்படும் இது போன்ற பிரச்சனைகளுக்கு, ஆண்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில், இந்த விழிப்புணர்வு நடத்தப்படுகிறது என்று கூறினார்.

10 பெண்களில் ஒருவரை பாதிக்கும் PCOS ஒரு பொதுவான குணப்படுத்தக் கூடிய நோய் நிலைமையாகும். இது ஒரு பெண்ணின் பூப்பு பருவத்தில் இருந்து தொடங்கி, மாதவிலக்கு நின்ற பிறகும் தொடர்கிறது. PCOS ஒழுங்கற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு இல்லாமல் இருத்தல், முகப்பரு, முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர்த்தல், கருத்தரிப்பதில் சிரமம், எடை அதிகரிப்பு, மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளால் பெண்கள்  பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு வகையான அறிகுறிகள் இருக்கக்கூடும். ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக சர்க்கரையின் அளவு, மற்றும் மன நிலை மாற்றங்கள், இதயப் பிரச்சினைகள், கருப்பைப் புற்றுநோய் போன்ற நீண்ட கால உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளும் உண்டாகின்றன. ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சிகள், விழிப்புணர்வு மற்றும் அவசியமான சிகிச்சைகள் மூலம் பெண்கள்     வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டில் உள்ள PCOS கிளினிக், PCOS-ஐ திறம்பட கையாள்வதற்கான அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறந்த  மையமாக செயல்பட்டு வருகிறது.  மகளிர் மருத்துவ நிபுணர், தோல் மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், உணவியல் நிபுணர், உளவியலாளர், உட்சுரப்பியல் நிபுணர், குடலியல் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் இருதயநோய் நிபுணர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் முழுமையான கவனிப்பை வழங்குகின்றனர். 

காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டில் இந்த PCOS கிளினிக்கை தொடங்கியதன் மூலம் பெண்களுக்கு முழுமையான உடல்நலப் பராமரிப்பை சிறந்த முறையில் வழங்கும் குறிக்கோளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை

 

.com/img/a/