ஆர் யூ ஓகே பேபி திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் ஆர் யூ ஓகே பேபி. இப்படத்தில் நடிகை அபிராமி , மிஷ்கின், சரண்யா ரவிச்சந்தர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இக்கதையினை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
பாலச்சந்திரன் ( சமுத்திரகனி) & வித்யா( அபிராமி) தம்பதியினர் கேரளாவில் வசதியுடன் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருக்கிறது. அப்போது அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். அந்த குழந்தையுடன் இவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.
குழந்தையை தத்தெடுத்த 1 வருடம் கழித்து, அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயான ஷோபா சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம், தன் குழந்தைக்காக உதவி கேட்டு வருகிறார். அந்த குழந்தையை பற்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விசாரிக்கும்போது குழந்தையை தத்து கொடுத்ததற்கான எந்த ஒரு அரசாங்க பதிவு ஆவணமும் இல்லாமல் இருக்கிறது, இந்த சூழ்நிலையில் அந்த குழந்தை வளர்த்தவர்களுக்கு கிடைத்ததா? இல்லை பெற்றவருக்கு கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பு பிரமாதம் கதைக்கேற்ப மிகக் கச்சிதமாக நடித்துள்ளார்.
நடிகை அபிராமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார் ஒரு தாய்மைக்காக ஏங்கும் பெண்ணாக அனைவரின் மனதையும் கவர்ந்து உள்ளார். குழந்தைக்காக ஏங்கும் பாசத் தாயாக வாழ்ந்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் மிக அற்புதமாக திரை கதையை நகர்த்தியுள்ளார் இக்கதை அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம் போலவே தோன்றுகிறது ஏனென்றால் சொல்வதெல்லாம் உண்மை என்று தொடரில் அவர் நிஜமாகவே இது போன்ற சம்பவங்களை அவர் கையாண்டு உள்ளார்.
மிஷ்கின் சிறிது நேரம் வந்தாலும் கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
மொத்தத்தில் சமூகத்திற்கு திரைப்படம் ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை