ரெட் சாண்டல் வுட் திரை விமர்சனம் !
தமிழ் திரைப்பட உலகில் நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி இவரது நடிப்பில் ரெட் சாண்டல் வுட். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார், எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த கதையினை அறிமுக இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கியுள்ளார்.
திருப்பதி சேஷாச்சலம் காடு 190 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்த காடு முழுவதும் மிகவும் விலையுயர்ந்த மரமான செஞ்சந்தன மரம் இருக்கிறது. இந்த மரங்களை வெட்டி விற்று வியாபாரம் செய்பவன்தான் KGF ராம், இதற்கிடையியல் யார் வந்தாலும் அவர்களை கொன்றுவிடுவார். இவையனைத்தையும் சமூக போராளி என்ற போர்வையில் ( பார்வையில் ) செயல்படுத்துகிறார்.
தனது நண்பனின் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால், நண்பனை அழைத்துவர திருப்பதி செல்கிறார் கதையின் நாயகன் வெற்றி, அப்படி சென்ற இடத்தில் வேறொரு நண்பனை பார்க்க, அப்போது போலீஸ் வந்து இவர்களை சோதனை செய்ய வெற்றியின் நண்பர் செஞ்சந்தன கட்டைகளை வைத்திருந்ததால், அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த பிரச்னையிலிருந்து வெற்றி தப்பித்து தன் நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
நடிகர் வெற்றி கதை தேர்வு செய்வதில் கில்லாடி என்று கூறலாம்.
திரைப்படம் வெற்றிக்கு வெற்றி என்று கூறலாம்.
உண்மை சம்பவத்தை மிகத் துணிச்சலுடன் எடுத்து இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் போலீஸ் அதிகாரியாக நேர்மையாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
நடிகர் மாரிமுத்து கதாபாத்திரமும் நன்றாக உள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
திரைப்படம் சமூகத்திற்கு முக்கியமானவை.
ஏனென்றால் இது போன்ற சம்பவங்கள் நம் நாட்டில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன இத்திரைப்படம் ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating: 3 / 5
கருத்துகள் இல்லை