வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரை விமர்சனம் !
லெஸ்பியனாக நடிக்கும் பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தில் நடிகர் அர்ஷத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்கியுள்ளார் ஜெயராஜ் பழனி.
இசை பிச்சர் சார்பில் நீலிமா இசை தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் `வாழ்வு தொடங்குமிடம் நீதானே`.
ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வித்தியாசமான சூழலில் சந்தித்து, காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே மீதி கதை.
திரைக்கதை மிக அற்புதமாக நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
சில காட்சிகள் நம் சிரிக்க வைக்கின்றன சிந்திக்க வைக்கின்றன. சுருதி மற்றும் நிரஞ்சனாவின் நடிப்பு பிரமாதம் மிக யதார்த்தமாக இருவருக்கும் இடையே காதல் காட்சிகளை எடுத்துள்ளார் இயக்குனர்.
இப்படத்தின் மூலம் லெஸ்பியன்களின் காதல் பற்றி தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்வார்கள்.
இருவருக்கும் இடையே முத்த காட்சிகள் இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இணைவார்களா என்பதே நம் மனதில் ஓடும்.
உண்மை சம்பவங்களை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.
இதுபோன்ற கதைகளை தேர்வு செய்து தயாரித்துள்ளார் நீலிமா இசை அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இப்படத்தில் பாடல்கள் பரவாயில்லை.
தர்ஷன் குமார் இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இத்திரைப்படம்
ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
சமுதாயத்தில் லெஸ்பியன்களின் விழிப்புணர்வு திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
மொத்தத்தில் திரைப்படத்தை அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை