நெகிழ்வான ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தில் Cleartrip புதிய புரட்சியைப் படைத்துள்ளது !
நெகிழ்வான ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தில் Cleartrip புதிய புரட்சியைப் படைத்துள்ளது; ‘கேன்சல் ஃபார் நோ ரீசன்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது !
Chennai, 13 செப்டம்பர் 2023: Flipkart நிறுவனமான Cleartrip , 'கேன்சல் ஃபார் நோ ரீசன்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் உயர்ந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. இத்தொழில்துறையின் முதலாவது அம்சம், பயனர்கள் தங்கள் ஹோட்டல் முன்பதிவுகளை எந்த நேரத்திலும் கூடுதல் கட்டணமின்றி செக்-இன் செய்வதற்கு முன்பு ரத்துசெய்ய உதவும், இது அவர்களின் பயண அனுபவத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது.
பெயருக்கு ஏற்றவாறு, 'கேன்சல் ஃபார் நோ ரீசன்' வசதி, வாடிக்கையாளர்கள் தங்கள் ஹோட்டல் முன்பதிவுகளை எத்தகைய காரணமும் குறிப்பிட வேண்டிய தேவையின்றி, ரத்து செய்ய உதவுகிறது மற்றும் ஒரு முன்பதிவுக்கு ரூ.25000 வரை முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். Cleartrip தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராப்பர்டிகளுக்கும் இது பொருந்தும். இந்த தனித்துவமான சலுகையானது வாடிக்கையாளர்களின் முக்கிய புள்ளிகளை நிவர்த்தி செய்ய தயாராக உள்ளது - கடைசி நிமிட ரத்துசெய்தல் மற்றும் எதிர்பார்ப்புகள் மற்றும் உண்மையான ஹோட்டல் அனுபவத்தில் உள்ள முரண்பாடுகளைத் தடுக்கும் கடுமையான முன்பதிவு கொள்கைகள். ஒரு ஹோட்டலைத் தேர்ந்தெடுப்பதில் ரத்துசெய்யும் கொள்கை முக்கிய உந்து காரணிகளில் ஒன்றாகும். 'கேன்சல் ஃபார் நோ ரீசன்' வசதியின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் மனதில் இருந்து ரத்துசெய்யும் கொள்கை கவலை முற்றிலும் அகற்றப்பட்டு, Cleartrip மூலம் கவலையற்ற முன்பதிவு பயணத்தை அனுபவிக்க முடியும். தொடக்க சலுகையாக, பயனர்கள் இந்த பிரீமியம் சலுகையை Cleartrip இல் கூடுதல் கட்டணமின்றி பெறலாம்.
இந்த மேம்பாடு குறித்து பேசிய Cleartrip இன் CEO அய்யப்பன் R. அவர்கள், “Cleartrip இல், பயனர்களுக்கு இணையற்ற நெகிழ்வுத்தன்மையை வழங்கும் புரட்சிகரமான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அம்சங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இதுபோன்ற வகைகளில் புதிதான, 'கேன்சல் ஃபார் நோ ரீசன்' மூலம் பயண கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த பயனர் அனுபவங்களின் புதிய எல்லைகளை வரையறுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு மன அழுத்தமில்லாத பயண அனுபவத்தைப் பெறுவதற்கும், அவர்கள் அடிக்கடி பயணம் செய்வதற்கும் அனுமதிக்கவும், அதன் மூலம் பயண நிலப்பரப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவும் எங்களுக்கு உதவுகிறது. இது எங்களுக்கும் எங்கள் பயனர்களுக்கும் எங்கள் 3 லட்சம்+ ஹோட்டல் கூட்டாளர்களுக்கும் முன்பதிவு அனுபவத்தின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
Cleartrip பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் பயனருக்கு நட்பார்ந்த, மதிப்பு சார்ந்த சலுகைகளின் பரந்த அளவைத் தொடர்ந்து வெளியிடுகிறது. CT FlexMax முதல் Medi Cancel வரை Axis வங்கியுடனான அவர்களின் சமீபத்திய கூட்டாண்மை வரை, ஒவ்வொரு முடிவும் வாடிக்கையாளர்களுக்கு தகவலறிந்த முடிவெடுக்க உதவுவதோடு தொந்தரவு இல்லாத முன்பதிவை அனுபவிக்க உதவுகிறது. VIDEC இன் தொழில்துறை தரப்படுத்தல் ஆய்வின்படி, நிறுவனம் சமீபத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய OTA ஆக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை