ஜவான் - செப்டம்பர் 7- 7 கேள்வி-பதில்கள் !
ஜவான் - செப்டம்பர் 7- 7 கேள்வி-பதில்கள் !
ஜவான்' படத்தை பற்றிய சில வேடிக்கையான கேள்விகளுக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி பதிலளித்திருக்கும் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்காக பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. அதிலும் ஆக்ஷன் கலந்த டிரைலரைக் கண்டு ரசித்த பிறகு படத்தின் வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். இதற்கு இப்படத்தின் முன்பதிவுகளே சாட்சியாக இருக்கிறது.
பார்வையாளர்களின் அதிகரித்து வரும் உற்சாகத்தை மேலும் உயர்த்துவதற்கு தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்கள் வழியாக 'ஜவான் -செப்டம்பர் 7- 7 கேள்வி பதில்கள்' என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். இது படத்தைப் பற்றிய வேடிக்கையான நுண்ணறிவை அனைவருக்கும் வழங்குகிறது.
1) ஷாருக்கானுக்கான கேள்வி : அட்லீயும், நீங்களும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்ற விரும்புவது உண்மையா?
இதற்கு பதிலளித்த ஷாருக்கான், '' பிகில் படத்தின் தயாரிப்பின் போது நான் அட்லீயை சந்தித்தேன். அவர் சிஎஸ்கே மற்றும் கே கே ஆர் போட்டிகளுக்கு சென்றிருந்தார். இதற்கு முன் அட்லீ என்னிடம் ஜவான் பற்றிய மூலக்கதையை சொன்னார். அத்துடன், 'ஐயா..! ஐந்து பெண்களுடன் நீங்கள் நடிக்கிறீர்கள். இது எனது படம். என் மனைவி பிரியாவும், நானும் நிறைய பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்று உணர்கிறோம். உங்களுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். அப்படித்தான் ஜவான் தொடங்கியது.
மேலும் ஜவான் படத்தில் காளி வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்தும் அந்த காணொளியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
2) விஜய் சேதுபதிக்கான கேள்வி : ஜவான் படத்தில் உங்களுக்கு வில்லன் வேடம் எப்படி கிடைத்தது? படத்தில் நீங்கள் உண்மையான வில்லனா? அல்லது ஷாருக்கானா?
இதற்கு விஜய் சேதுபதி பதிலளிக்கும் போது... 'விஜய் சேதுபதி -ஷாருக் கான் மற்றும் அட்லீ உடனான தனது உரையாடலை நினைவு கூர்ந்தார்.
ஷாருக்கிடம், 'சார் நான் உங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்' என்றேன். அதற்கு ஷாருக், 'கடந்த சில வருடங்களாக உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோம்' என்றார். அதனால் தான் இந்த படத்தில் இருவரும் இணைந்தோம்.
உண்மையான வில்லன் யார்? என்றால், இருவரும் அவரவர் வேடங்களில் நடிக்கிறோம். ஒருவருக்கொருவர் வில்லன்கள்'' என்று விஜய் சேதுபதி புத்திசாலித்தனமாக பதிலளித்தார்.
3) ஷாருக்கானுக்கான கேள்வி : நீங்கள் வில்லனா? அல்லது ஹீரோவா அல்லது வில்லனிக் ஹீரோவா? உங்களின் ரகசியத்தைப் பற்றி சொல்லுங்களேன்..?
இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ''இது ஒரு சாதாரண மனிதர்- எல்லோருடைய பொது நலனுக்காக அசாதாரமான விசயங்களை செய்கிறார்'' என்றார்.
விஜய் சேதுபதிக்கான கேள்வி : ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவம்?
இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, '' ஷாருக் கான் நேர்காணலின் போது எப்படி புத்திசாலித்தனமாக கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்கிறார் என்பதை பார்த்து வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி அறிந்து கொள்ள.. அவரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளது'' என்றார்.
5) ஷாருக்கானுக்கான கேள்வி : நீங்கள் ஒரு அதிரடி நாயகனா? அல்லது ஆயுள் காப்பீட்டுடன் உள்ள சாதாரண நபரா?
இதற்கு பதிலளித்த ஷாருக்கான், '' என் இன்சூரன்ஸ் பாலிசி முடிந்து விட்டது. பலமுறை காயம் அடைவதால் எனக்கு யாரும் காப்பீடு செய்ய விரும்பவில்லை. மேலும் ஆக்ஷன் படங்களை செய்வதை விரும்புவதற்கு ஒரே காரணம்.. என்னுடைய இளைய மகன் ஆப்ராம். அவர் ஆக்சன் -அனிம் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படங்களை பார்க்க விரும்புவதால்.. அவருக்காக ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்'' என்றார்.
6) விஜய் சேதுபதிக்கான கேள்வி: இவ்வளவு அழுத்தமான வில்லன் வேடத்திற்கு நீங்கள் எப்படி தயாரானீர்கள்?
''திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் வல்லவன் என்பது எனக்குத் தெரியும். வேறு எதையும் என் தலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. நான் செய்ய விரும்பாத வேடத்தை செய்தால்.. அது என் மனதை கெடுத்து விடும் என்று நம்புகிறேன்'' என்றார்.
7) ஷாருக்கானுக்கான கேள்வி : ஜவானில் நடிக்க ஒப்புக்கொண்ட தருணம் குறித்து...?
அந்த தருணத்தைப் பற்றி ஷாருக்கான் குறிப்பிடும்போது, '' நான் மொட்டை ஹீரோவாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது இயக்குநர் அட்லீ என் கையில் நிறைய பவுடரைக் கொட்டியது எனக்கு நினைவிருக்கிறது. நான் அந்த கட்சியிலும் நடித்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இறுதியாக அந்த காட்சியை பார்த்தபோது மறக்க முடியாததாக இருந்தது. ஜவான் படத்திற்கான எனது தருணம் அதுதான். '' என்றார்.
இந்த காணொளியின் மூலம் ரசிகர்களின் உற்சாகத்தை விளிம்பிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் படத்தில் இதைவிட நிறைய இருக்கிறது என்றும் அந்த காணொளியில் ஷாருக்கான் உறுதியளித்திருக்கிறார்.
அத்துடன் செப்டம்பர் 7 தேதியன்று ஜவானை கண்டு ரசிக்குமாறு அனைவரையும் அந்த காணொளியில் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
'ஜவான்' படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
https://youtu.be/1xZRCt84CBc?si=3kfp6HBpVgdlj0Gb
https://www.instagram.com/reel/Cwzj2z8o7Nm/?igshid=MzRlODBiNWFlZA==
கருத்துகள் இல்லை