சற்று முன்



RED SANDAL WOOD " செப்டம்பர் 8 ம் தேதி வெளியாகிறது !

 2015 ல் செம்மரம்  வெட்டியதாக கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் " RED SANDAL WOOD " செப்டம்பர்  8 ம் தேதி வெளியாகிறது !

வெற்றி நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் "  RED SANDAL WOOD " செப்டம்பர்  8 ம் தேதி வெளியாகிறது.

JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம்  "  RED SANDAL WOOD 

இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் ,      சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர்  J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு  -  சுரேஷ் பாலா

இசை - சாம் CS 

பாடல்கள் - யுகபாரதி 

சவுண்ட் டிசைன் -  ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி 

எடிட்டிங்  - ரிச்சர்ட் கெவின்

சண்டை பயிற்சி - மிராக்கில் மைக்கேல் .

தயாரிப்பு மேற்பார்வை - பாண்டியன்

மக்கள் தொடர்பு - மணவை புவன் 

தயாரிப்பு - J.பார்த்தசாரதி  

கதை, திரைக்கதை  எழுதி இயக்கியுள்ளார்  - குரு ராமானுஜம்.

படம் பற்றி இயக்குனர் குரு ராமானுஜம் பகிர்ந்தவை....

இந்த கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை , படவேடு  மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு

புனையப்பட்டது.  படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார் . அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார் . அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி . அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள்  யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராத போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் . 

கடத்தல் காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள் ? என்கவுண்டர் செய்ய சொன்னது யார் ? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக்கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலை செய்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி . இதில் பிரபாவிற்கும் கர்ணாவிற்கும்

என்ன நடந்தது என்பது உண்மைக்கும் மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை.

படபிடிப்பு    ரேணிகுண்டா ,    தலக்கோணம் , தேன்கணி கோட்டை     போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றது.

படம் வருகிற செப்டம்பர் மாதம் 8 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவீஸ் K.ரவி வெளியிடுகிறார்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை