பாட்னர் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகரான ஆதி நடிப்பில் இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பாட்னர். இந்த படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி,பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ஜான் யோகிபாபு, உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சபீர் அகமது ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து இருக்கிறார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரியபிரகாஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் ஹீரோ ஆதி ஊரில் நிறைய கடன்களை வாங்கி இருப்பதால் கடனை அடைக்க சென்னைக்கு வருகிறார். அது மட்டும் இல்லாமல் அவர் வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு இல்லாமல் மாதம் தான் கெடு கொடுக்கிறார்கள். கடன் அடைக்காவிட்டால் அவர் தங்கையை கடன் கொடுத்தவர்கள் வற்புறுத்தி திருமணம் செய்து கொள்வார்கள். இதனால் கடனை அடைத்து தங்கையை மீட்க சென்னைக்கு வெறியுடன் தன்னுடைய நண்பர் யோகி பாபு உடன் ஆதி வருகிறார்.
இருவரும் நிறைய இடங்களில் அலைந்து திரிந்து வேலை கேட்கிறார்கள். ஆனால், வேலை கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் திருடன் ஆகி விடுகிறார்கள். அப்போது ஒரு நாள் இவர்களுக்கு ஜான் இவர்களுக்கு ஒரு வேலை தருகிறார் பாண்டியராஜனிடம் இருந்து திருட வேண்டும்.
மனித ஜெனிடிக்ஸ் பற்றி ஆராய்ச்சியில் பாண்டியராஜ் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஆராய்ச்சிக்கு முக்கியமாக ஒரு சிப் திருட வேண்டும். அதை கொண்டு வந்தால் 50 லட்சம் பணத்தை தருகிறேன் என்று ஜான் சொல்கிறார்.
இதனால் அந்த திருட்டு வேலையை செய்ய ஹீரோ ஆதி ஒத்துக்கொள்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது யோகி பாபு அன்சிகாவாக மாறுகிறார். அதாவது பின்னால் என்னெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆதி இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும். தங்கை சென்டிமென்ட், திருட்டு, அறிவியல் ஆராய்ச்சி என படத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவர இயக்குனர் முயற்சி இருக்கிறார்.
ஆனால், கதை கொண்டு சென்ற விதத்தில் தான் சொதப்பிவிட்டார் என்று சொல்லலாம். இது காமெடி சீனா? சீரியஸ் சீனா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு திரைக்கதையை உருவாக்கியுள்ளார். திருடச் செல்லும் இடத்தில் கூட எந்த ஒரு சீரியஸும் இல்லை. ஆனால், யோகி பாபு ஹன்சிகாவாக மாறி அவர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
ஹன்சிகா வந்த பிறகுதான் சுவாரசியமாக இருக்கிறது. ரவி மரியாவின் நடிப்பு பேச்சும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
ஆ மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை