பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் (பிஎன்சி மோட்டார்ஸ்) வாடிக்கையாளர் அனுபவ மையம் காஞ்சிபுரத்தில் திறப்பு !
பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் (பிஎன்சி மோட்டார்ஸ்) வாடிக்கையாளர் அனுபவ மையம் காஞ்சிபுரத்தில் திறப்பு !
காஞ்சிபுரம், ஆக.27–
கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் புதிய வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திறந்துள்ளது.
இந்த புதிய மையம் எண்.164/7, ஒயிட் கேட், திம்மசமுத்திரம், ஏனாத்தூர், தமிழ்நாடு 631502 என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் பிஎன்எசி நிறுவனத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது அமைந்துள்ளது.
இந்த புதிய மையத்தை சிறப்பு விருந்தினர் Dr. சம்பத் ரவி நாராயணன் மற்றும் பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர் எஸ்.வி. ராமசுவாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவின்போது பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 மின்சார வாகனத்தையும் அவர்கள் அறிமுகம் செய்தனர். பல்வேறு பணிகளுக்கு ஏற்ற வகையில் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் நகர்புறத்திற்கு ஏற்ற வகையிலும், கரடுமுரடான பகுதிகளிலும் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளது.
இது குறித்து பிஎன்சி மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில், எங்களின் புதிய ஸ்டோர் இங்கு திறக்கப்படுவதன் மூலம் காஞ்சிபுரத்திற்கான போக்குவரத்தின் எதிர்காலத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். மின்சார வாகனங்கள் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்கான நுழைவு வாயிலாக நாங்கள் இங்கு தற்போது திறந்துள்ள அனுபவ மையம் இருக்கும். எங்களின் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110, மின்சார மோட்டார் சைக்கிள் சிறந்த செயல்திறன், அசைக்க முடியாத நம்பகத்தன்மை மற்றும் வசீகரிக்கும் வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 எட்ரோல் 40 பேட்டரி, எளிமையாக எடுக்கக்கூடிய வகையிலான 2.1 கிலோ வாட் பேட்டரி மற்றும் கையடக்க சார்ஜருடன் வருகிறது. எட்ரோல் பேட்டரி அதிகபட்ச பாதுகாப்பை கொண்டிருப்பதோடு, இதற்கு ஏஐஎஸ்–156, திருத்தம் 3, பேஸ் 2 தரச் சான்றிதழ் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 5 ஆண்டு அல்லது 60 ஆயிரம் கி.மீ உத்தரவாதத்தை பிஎன்சி வழங்குகிறது, அத்துடன் சேஸ்ஸிக்கு 7 ஆண்டுகளும், பவர்டிரெய்னுக்கு 3 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது. சேலஞ்சர் எஸ்110ஐ பொறுத்தவரை, அதிகபட்ச வேகம் 75 கி.மீ. ஆகவும், அதன் வரம்பு 90 கி.மீ. ஆகவும், 200s கிலோ எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வசீகரமான தோற்றம், வலிமைமிக்க சேஸ் ஆகியவை அனைத்து பாதைகளிலும் செல்லுக்கூடிய வகையிலும் அனைவருக்கும் ஏற்ற வகையிலும் உள்ளது.
பிஎன்சி நிறுவனத்தின் சேலஞ்சர் எஸ்110 இந்திய சந்தைக்கு ஏற்ற நிலையான போக்குவரத்து தீர்வுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருப்பதோடு, இந்நிறுவனத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மீதான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது. காஞ்சிபுரத்தில் இந்நிறுவனத்தின் 3வது அனுபவம் மையம் திறக்கப்பட்டு இருப்பதன் மூலம், இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை தமிழகத்தில் விரிவுபடுத்தி வருகிறது. இந்த அனுபவ மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 மோட்டார் சைக்கிளின் சிறப்பு அம்சங்களையும் செயல்திறனையும் நேரடியாக பார்த்து அனுபவிக்க முடியும்.
இந்த அனுபவ மையம் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.bncmotors.in. இணையதளத்தைப் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை