சற்று முன்



கிராண்ட் மோஸ்’ – பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரத்யேக ஷோரூம் சென்னையில் திறப்பு !

கிராண்ட் மோஸ்’ – பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் 

முதல் பிரத்யேக ஷோரூம் சென்னையில் திறப்பு ! 

இளம் இந்தியர்களுக்கான புதுமைமிக்க ‘சேலஞ்சர் எஸ்110’ பைக் அறிமுகம் 

சென்னை, ஆக.3,2023: கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவனம் (பிஎன்சி), தனது பிரத்யேக மற்றும் முதல் டீலர்ஷிப்பை சென்னையில் ‘கிராண்ட் மோஸ்’ என்ற பெயரில் திறந்துள்ளது.

இந்த புதிய ஷோரூம் சென்னை, போரூரில் எஸ்வி மகால் அருகே திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புதுமைமிக்க, சிறந்த செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் திறன், சிறந்த வடிவமைப்பு மற்றும் நகர்புற மக்களை வெகுவாக கவரும் வகையில் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 என்ற பைக்கையும் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில், எங்களின் சேலஞ்சர் எஸ்110 பைக் முற்றிலும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது, இதற்கான மூலப்பொருட்கள் சப்ளையர்களைப் பொறுத்தவரை 90 சதவீதத்திற்கும் அதிமானோர் நமது மாநிலத்திலேயே உள்ளனர். மேலும் எங்கள் டீலர்ஷிப்பை நமது மாநிலத்தின் தலைநகரான சென்னையில் திறப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பைக்கிற்காக ஏற்கனவே பலர் முன் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.  

பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 பைக் எட்ரால் 40 பேட்டரியைக் கொண்டுள்ளது. எளிமையாக எடுக்கும் வகையில் இதில் 2.1kwh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளுது. மேலும் இதில் உள்ள சார்ஜரை எங்கும் கொண்டு செல்லலாம். எட்ரால் பேட்டரி மிகவும் பாதுகாப்பானதோடு சமீபத்திய தரநிலைகளான AIS-156, திருத்தம் 3, பேஸ் 2 ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சலுகையாக பேட்டரிக்கு 5 ஆண்டு கூடுதல் உத்தரவாதத்தை பிஎன்சி வழங்குவதோடு, மேலும் சேஸ்ஸில் 7 ஆண்டுகள் மற்றும் மோட்டருக்கு 3 ஆண்டுகள் கூடுதல் உத்தரவாதம் அளிக்கிறது. இந்த பைக் மணிக்கு 75 கி.மீ. தூரம் செல்லும் திறன் கொண்டதாகும். மேலும் இதில் 90 கி.மீ. வேகம் வரை செல்லலாம். மேலும் இது 200 கிலோவுக்கும் அதிகமான பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டதாகும். இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பதோடு கரடுமுரடான பாதை உட்பட அனைத்து பகுதிகளிலும் செல்லும் திறன் கொண்டதாகும். 

இந்த பைக் வாடிக்கையாளர்களின் போக்குவரத்திற்கு சிறந்த தீர்வை வழங்குவதோடு, இந்திய சந்தைக்கு ஏற்ற வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படும் பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் உள்ளது. சென்னையில் இந்நிறுவனம் திறந்துள்ள கிராண்ட் மோஸ் ஷோரூமின் மூலம் தனது செயல்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது.  ஷோரூமை பார்க்க வரும் வாடிக்கையாளர்கள் இந்த பைக்கின் சிறப்பு அம்சங்களையும் செயல்திறனையும் நேரடியாக பார்க்கலாம். இந்த ஷோரூம் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மேலும் தகவலுக்கு, www.bncmotors.in–ஐப் பார்க்கவும்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை